Engineering Marvel NEOM City: செளதி அரேபியாவில் பூஜ்ஜிய கார்பன் நகரத்தை உருவாக்கும் இளவரசர் முகமது பின் சல்மானின் கனவுத் திட்டம் 2030ம் ஆண்டுக்குள் நனவாகும்.
500 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் நியோம் நகரம், இளவரசர் முகமது பின் சல்மானின் கனவுத் திட்டம். எண்ணெய் வளம் மிக்க நாடான செளதி அரேபியா, கார்பன் இல்லா நகரத்தை உருவாக்குகிறது, இந்த அதிசய நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.
கற்பனை நாவலில் மட்டுமே படித்திருக்கக்கூடிய மாய நகரத்தை செளதி அரேபிய பட்டத்து இளவரசரும் ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் கட்ட திட்டமிட்டிருக்கிறார்.
வடமேற்கு சவூதி அரேபியாவில் 500 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டு வரும் திட்டம்
இந்த நகரம் மனிதகுலத்தின் அடுத்த அத்தியாயமாகவும், பட்டத்து இளவரசரின் பாரம்பரியமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
200 மீட்டர் அகலமும், 170 கிலோமீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரமும் இருக்கும் இந்த நகரத்தில் 9 மில்லியன் பேர் வசிக்கலாம்
'மிரர் லைன்' சவூதி அரேபியாவின் கடலோர பாலைவனம், மலை மற்றும் மேல் பள்ளத்தாக்கு நிலப்பகுதி வழியாக செல்லும்