செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகள்.. பொருளாதார வெற்றி, அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்ளவோம்.

2024 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதம் செப்டம்பர் ஆகும். இந்த மாதம் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, ஜோதிடப் பார்வையிலும் முக்கியம் வாய்ந்தது. செப்டம்பர் மாதத்தில் நான்கு முக்கிய ராசி மாற்றங்கள் நடக்கவுள்ளன, இது அனைத்து 12 ராசிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். 

 

 

1 /7

செப்டம்பர் 04 புதன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். செப்டம்பர் 16 சூரியன் கன்னி ராசியிலும், செப்டம்பர் 18 சுக்கிரன் துலாம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இதற்குப் பிறகு, செப்டம்பர் இறுதியில், அதாவது செப்டம்பர் 23 புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

2 /7

இந்த செப்டம்பர் மாதம் புதன், சூரியன், சுக்கிரன் தங்களின் ராசிகளை மாற்றப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும். அதனுடன் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே செப்டம்பர் கிரகப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.  

3 /7

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல காலம். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் வெற்றி பெறலாம். குடும்பத்தினருடன் நல்லுறவு இருக்கும்.

4 /7

சிம்மம்: சிம்ம ராசிக்கு இந்த கிரகப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்பம் அல்லது நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம். 

5 /7

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். வேலை மாற்றம் ஏற்படும். நல்ல வருமானம் உயரும். பழைய முதலீடு மூலம் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

6 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் கிரகங்களின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். பொருளாதாரத் துறையில் வளர்ச்சி இருக்கும். முதலீடு மூலம் நன்மை பெறலாம். நல்ல லாபத்தைப் பெறலாம். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு உண்டாகும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.