செப்டம்பர் மாத ராசிபலன்.. 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும், முழு ராசிபலன்

Monthly Horoscope in Tamil: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் கிரகப் பெயர்ச்சியின் பார்வையில் செப்டம்பர் மாதம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பிள்ளையார் சதுர்த்தி, ராதா அஷ்டமி போன்ற மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது.

மாதத்தின் நடுப்பகுதியில் சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சி அடையும். அதனுடன் இன்னும் சில கிரகப் பெயர்ச்சிகளும் நடக்க உள்ளது. இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் எப்படி பாதிக்கும், 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

1 /13

இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பலன் கிடைக்கும். பயணங்கள் மற்றும் புதிய தொடர்புகளை ஏற்படுத்த எண்ணங்கள் இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் தீரும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் மாற்றங்களைச் செய்யாதீர்கள்.   

2 /13

மனதளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஹனுமான் சாலிசாவைப் படிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி நல்ல பலனைக் காண்பீர்கள். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

3 /13

இந்த மாதம் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். முதலீடு நல்ல பலனைத் தரும். நெட்வொர்க்கை வளர்ப்பது உங்கள் வேலையில் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் லாபம் பெறுவீர்கள். கூட்டு வியாபாரம் அதிர்ஷ்டத்தை தரும்.

4 /13

இந்த மாதம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சோம்பேறித் தனமாக உணருவீர்கள், மிகவும் நிதானமான மனநிலையில் இருக்க வேண்டும். வேலையில் பெரிய மாற்றம் தெரியவில்லை. பதவி உயர்வு கிடைக்கலாம்.

5 /13

சிம்ம ராசிக்காரர்கள் எடுத்த தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும். வேலை தொடர்பான உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு வழி வகுக்கும். தொழில் நுட்பப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பான புதிர்களைத் தீர்ப்பதில் கிரகங்களின் சேர்க்கை உதவியாக இருக்கும். 

6 /13

இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. பல முடிவுகளை விருப்பமில்லாமல் கூட எடுக்க வேண்டியிருக்கும். சிறந்த நிர்வாகம் உங்கள் மேலதிகாரிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். தொழிலதிபர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் அதே வேளையில் வெளியூர் தொடர்பான வேலைக்காக பயணம் செய்ய நேரிடலாம்.

7 /13

செப்டம்பர் மாதம் துலாம் ராசிக்காரர்களின் நிலை நன்றாக இருக்கும். முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். குழுப்பணியில் ஈடுபடுவது நன்மை தரும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபார விஷயங்களில் லாபம் ஈட்டுவதற்கு ஏற்ற மாதம்.   

8 /13

செப்டம்பர் மாதத்தில் கடின உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு வேலைகளுக்கு விடாமுயற்சியுடன் தயாராக வேண்டும். மாத தொடக்கத்தில் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உருவாக்கலாம்.

9 /13

இந்த ராசிக்காரர்கள் பணத்தை முதலீடு செய்விதை தவிர்க்க வேண்டும். சக ஊழியர்களின் ஆதரவைப் பெறலாம். இளைஞர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் பி.பி., தொற்று ஏற்படலாம்.   

10 /13

செப்டம்பர் மாதத்தில், மகர ராசிக்காரர்கள் மிகவும் இனிமையாக பேச வேண்டி இருக்கும். வணிக ஏலங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். பதவி உயர்வு பெறலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாத இறுதியில் நிச்சயம் நல்ல செய்திகள் பெறலாம்.

11 /13

சின்னச் சின்ன வேலைகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்தில் செய்ய வேண்டியிருக்கும். திறமைக்கேற்ப பரிசுகளை பெறுவீர்கள். சூழ்நிலை தற்போது சாதகமாக இல்லை, கடின உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். திடீர் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

12 /13

மீன ராசிக்காரர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மாதத்தின் ஆரம்பம் நன்றாக இருக்கும். பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அன்பாக இருப்பீர்கள். ஹோட்டல் நிர்வாகம் மற்றும் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.