சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்!

Shikhar Dhawan announces retirement: இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

 

1 /6

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வந்தார் தவான்.   

2 /6

ஷிகர் தவான் இந்தியாவிற்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.  

3 /6

38 வயதான தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  

4 /6

"இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​​​எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன. எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும், நான் அதை அடைந்தேன்" - தவான்.  

5 /6

"நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, எனக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் கிடைத்தது" - தவான்.  

6 /6

ஷிகர் தவான் கடைசியாக 2018ம் ஆண்டு இந்தியாவிற்காக டெஸ்டில் விளையாடினார். 2022ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்தியாவிற்காக விளையாடினார். 2021ம் ஆண்டு கடைசியாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடினார்.