வெங்கடாசலபதியிடமே வேலையை காட்ட முடியுமா? திருப்பதி லட்டுக்கே அல்வா? இல்லை அரசியலா?

Impure Ghee In Tirupati Laddu: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் உலகிலேயே பணக்காரக் கடவுள். அவருக்கு தினசரி கோடிக்கணக்கில் வந்து குவியும் காணிக்கைகள், திருப்பதி மொட்டை, லட்டு பிரசாதம் ஆகியவை உலக புகழ் பெற்றவை...

கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியதும், குற்றச்சாட்டை பிரசாதத்தை ஆய்வு செய்த அறிக்கை உறுதி செய்துள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது  

1 /8

பக்தர்களின் நம்பிக்கையை ஆந்திராவை ஆட்சி செய்த ஜெகன் மோகன் ஆட்சி சிதைத்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். அந்த குற்றச்சாட்டு உண்மை என்று ஆய்வு செய்த அறிக்கையும் உறுதி செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

2 /8

ஏழுமலையான் கோயிலில் கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவல், திருப்பதி லட்டுவின் தரத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது. பக்தர்களின் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது

3 /8

திருப்பதி லட்டு என்றாலே, நெய் மணக்க, முந்திரி திராட்சை பச்சை கற்பூரம் மணக்க இருக்கும். அருமையான சுவையில் அனைவரையும் கவர்ந்த பிரசாதத்தில் மோசடி என்பது அதிர்ச்சியளிக்கிறது.

4 /8

உண்மையில், இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கமுள்ளது என ஜெகன்மோகன் ரெட்டியும் அவரது கட்டியினரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்

5 /8

திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார். மனிதப் பிறவிகள் இப்படிக் குற்றம் சாட்டமாட்டார்கள், அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்கமாட்டார் என்பதை நிரூபிக்கிறார் சந்திரபாபு நாயுடு என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பியும், திருமலை தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

6 /8

திருமலை பிரசாதம் வழங்கும் விஷயத்தில் நானும் எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். தனது குடும்பத்தினருடன் சத்தியம் செய்ய சந்திரபாபு நாயுடு தயாரா?" என்று சுப்பாரெட்டி சவால் விடுத்துள்ளார்

7 /8

 திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் குறித்து சர்ச்சை இத்ற்கு முன்பும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

8 /8

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க தரமற்ற நெய் வழங்கியதாக, சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது