Gold Price Today: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! ஒரு சவரனே இவ்வளவா?

Gold Price Today: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது.  ஒரு சவரன் தங்கம் விலை தற்போது ரூ. 58,000 ஆக உயர்ந்துள்ளது.

 

1 /6

தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகமாக உயர்ந்துள்ளது. திருமணம் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தங்கம் வாங்க இருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

2 /6

தங்கத்தின் மீதான வரியை குறைத்து அரசு உதவ முயற்சித்தாலும், இன்னும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்போதே தங்கம் வாங்க வேண்டுமா அல்லது விலை குறையும் வரை காத்திருக்க வேண்டுமா என்று மக்கள் யோசித்து வருகின்றனர்.   

3 /6

அக்டோபர் மாதம் தொடக்கத்தில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 56,000 ஆக இருந்தது. இப்போது அது ரூ. 58,000 ஆக உயர்ந்துள்ளது. இன்று அக்டோபர் 21ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.    

4 /6

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, தற்போது ரூ. 7,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து, 58,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.   

5 /6

24 காரட் தங்கம் விலையும் ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,695 ஆக உள்ளது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.62,040 ஆக உள்ளது.   

6 /6

வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,07,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.