தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Health Benefits Of Red Banana: கோடை காலம் தொடங்கி நம்மை வட்டி வதைக்கிறது. இந்த கோடை காலத்தில் செவ்வாழை மிகவும் நன்மை தரும். இந்த செவ்வாழைப் பழம், சாதரண வாழைப்பழத்தை விட சற்று விலை அதிகம் என்றாலும், அதைவிட ஊட்டச்சத்தும் அதிகம் உள்ளதுதான். எனவே செவ்வாழைப்பழங்களை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் எவை என்பதை இந்த பதிவில் காண்போம்.

மஞ்சள் நிற வாழைப்பழத்தை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் எப்போதாவது சிவப்பு நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தை பாத்திருக்கிறீர்களா? ஆம், சிவப்பு நிற வாழைப்பழம் என்று கூறப்படும் செவ்வாழை பற்றி தான் இன்று நாம் இந்த கட்டுரையில் காண உள்ளோம். செவ்வாழையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /9

முக்கியமான சத்துக்கள் நிறைந்தது: செவ்வாழை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் செவ்வாழையில் குறிப்பாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவற்றில் நிறைந்துள்ளன.

2 /9

நார்ச்சத்து நிறைந்து: செவ்வாழை ஒரு பழத்தில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால் செவ்வாழை பழம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது இந்த ஊட்டச்சத்துக்கான RDIயில் 10 சதவீதம் ஆகும்.  

3 /9

சிறுநீரகக் கற்கள்: செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை இந்த பழம் தடுக்க உதவுகிறது.

4 /9

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்: செவ்வாழையில் உள்ள உணவு நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதைக் கட்டுப்படுத்தும். செவ்வாழையில் ஜிஐ 45 ஆக உள்ளது, எனவே இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

5 /9

இரத்த அழுத்தம்: செவ்வாழையை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் அதைக் கட்டுப்படுத்த வேலை செய்கிறது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இது இரத்த அழுத்தத்தை பராமரிப்பதிலும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

6 /9

செரிமான ஆரோக்கியம்: செவ்வாழை சாப்பிட்டால் மனித உடலின் செரிமான அமைப்பை வெவ்வேறு வழிகளில் ஆதரிக்கின்றன. அவை ப்ரீபயாடிக்குகளால் நிரப்பப்படுகின்றன. இது குடல் பாக்டீரியாவுக்கு உணவளிக்கும் ஒரு வகை நார்ச்சத்து ஆகும்.

7 /9

கண் ஆரோக்கியம்: செவ்வாழையில் கரோட்டினாய்டுகள் உள்ளன, இவை பழங்களுக்கு சிவப்பு நிற தோலைக் கொடுக்கும் நிறமிகள். லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை சிவப்பு வாழைப்பழத்தில் உள்ள இரண்டு வகையான கரோட்டினாய்டுகள் இவை கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.

8 /9

இரத்த சோகை: உடலில் வைட்டமின் பி6 குறைப்பாடு ஏற்பட்டால் இரத்த சோகை அபாயம் ஏற்படும். மறுபுறம், செவ்வாழையில் அதிக வைட்டமின் பி6 இருப்பதால், இந்தப் பிரச்சனையில் இருந்து விடுப்பட இந்த பழத்தை சாப்பிடலாம். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.