SIIMA Awards 2023: தென்னிந்திய திரையுலகினர் பங்கேற்ற SIIMA திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. இதில் தமிழ் பிரபலங்கள் பலருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் கிடைத்தது? முழு விவரம்.
தென்னிந்திய திரையுலகினர் கலந்து கொண்ட SIIMA 2023 திரைப்பட விருதுகள் நேற்று நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
உலக நாயகன் கமல் ஹாசனுக்கு விக்ரம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை அதிதி ஷங்கர் பெற்றுக்கொண்டார். விருமன் படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.
சிறந்த இசைமையமைப்பாளருக்கான விருது விக்ரம் படத்திற்காக அனிருத்திற்கு கிடைத்தது. அவர் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் நடிகர் சதீஷ் அந்த விருதினை பெற்றுக்க்கொண்டார்.
சிறந்த நடிகை (Critics) விருதினை சாணி காயிதம் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் பெற்றுக்கொண்டார்.
சிறந்த இயக்குநருக்கான விருது-விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜிர்கு கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான (Critics) விருதினை மாதவன் பெற்றுக்கொண்டார். ராக்கெட்டரி படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.
சாதனையாளர் விருது இயக்குநர் மணி ரத்னமிற்கு கிடைத்தது. சிறந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை பிரதீப் ரங்கநாதன் பெற்றார். லவ் டுடே படத்திற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.
டான் படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான் விருது எஸ்.ஜே.சூர்யாவிற்கு கிடைத்தது.
சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவிற்கு கிடைத்தது. பொன்னியின் செல்வன் படத்திற்காக அவர் இந்த விருதை பெற்றார்.
சிறந்த காமெடி நடிகருக்கான விருது யோகி பாபுவிற்கு கிடைத்தது. லவ் டுடே படத்திற்காக அவர் இவ்விருதினை வாங்கினார்.