ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள்... நினைத்து நினைத்து உருக வைக்கும் இந்தியாவின் குரல்!

Shreya Ghoshal Birthday: பாடகி ஸ்ரேயா கோஷல் இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடியிருக்கும் இவர், தமிழ் திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிட்டைசயமானவர். இவரை குறித்த சிறுதொகுப்பை இதில் காணலாம். 

  • Mar 12, 2023, 20:22 PM IST

 

 

 

1 /7

ஸ்ரேயா கோஷல் 1984ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரில் பிறந்தார். 

2 /7

பின்னணி பாடகியாக அறியப்படும் இவர், தனது நான்கு வயது முதல் பாடி வருகிறார். இவர், 2002ஆம் ஆண்டு பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவ்தாஸ் படத்தில் இவர் பாடகியாக அறிமுகமானார்.   

3 /7

2002ஆம் ஆண்டில் கார்த்திக் ராஜா இசையமைப்பில் 'ஆல்பம்' என்ற படத்தில், 'செல்லமே செல்லம் என்றாயடி' பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு, இளையராஜா இசையமைப்பில் வெளியான சேரனின் 'சொல்ல மறந்த கதை' படத்தில் 'குண்டு மல்லி' பாடலையும் பாடியிருந்தார்.   

4 /7

இவர் தொடர்ந்து, மணி சர்மா, கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, ஜீ.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த் தேவா, இமான், ஜேம்ஸ் வசந்தன், விஜய் ஆண்டனி, தமன், அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், டிரம்ஸ் சிவமணி, சாம் சி.எஸ், ஜஸ்டின் பிராபாகரன் உள்ளிட்ட தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.   

5 /7

'நினைத்து நினைத்து பார்த்தேன்...' (7ஜி ரெயின்போ காலனி); 'உன்னவிட...' (விருமாண்டி); 'அண்டங்காக்கா கொண்டக்காரி...' (அந்நியன்); 'தாவணி போட்ட தீபாவளி' (சண்டக்கோழி); 'முன்பே வா... என் அன்பே வா' (சில்லுனு ஒரு காதல்); 'அய்யய்யோ' (பருத்திவீரன்); 'உருகுதே உருகுதே...' (வெயில்) என இவரின் தனித்துவமான நூற்றுக்கணக்கான பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

6 /7

ஸ்ரேயா கோஷலை இன்ஸ்டாகிராமில் மொத்தம் 2 கோடியே 65 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

7 /7

இவர் சுமார் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த ஷிலாதித்ய முகோபாத்யாயா என்பவரை 2015ஆம் ஆண்டில் மணந்துகொண்டார். இந்த தம்பதிக்கு, 2021ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.