தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!

Tips To Stay Away From People : வாழ்வில் நாம் சில நபர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்று யோசிப்போம். அவர்கள், நமக்கு தலைவலி கொடுப்பவர்களாக இருப்பர். அவர்களை எப்படி வீட்டிலிருந்து தள்ளி வைக்க வேண்டும் தெரியுமா?

Tips To Stay Away From People : மனிதர்கள் அனைவருமே ஒரே மாதிரியான கருத்துடையவராக இருந்து விடுவதில்லை. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மாதிரியான மனநிலை இருக்கலாம். ஆனால், அப்படி வேற்றுக்கருத்து இருந்தாலும், மரியாதையுடன் அதை ஒருவரிடம் எப்படி தெரிவிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவு இல்லாத பலர், பிறருக்கு தலைவலி கொடுப்பவர்களாக இருப்பர். இவர்களிடம் இருந்து தள்ளி நாம் தள்ளியிருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

1 /8

அமைதியாக இருங்கள்: உங்களுக்கு ஒருவர் மிகவும் தலைவலி கொடுக்கிறார் என்றால், அவர் கூறும் விஷயங்களுக்கு உடனடியாக ரியாக்ட் செய்வதை நிறுத்துங்கள். அமைதியாக, மூச்சு விடுவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 

2 /8

கேட்கலாம்: அவர்கள் பேசுவதற்கு நீங்கள் பதில் பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமைதியாக, அந்த சண்டை அல்லது பிரச்சனைக்குரிய நபர் அதை கடந்து போகும் வரை என்ன நடக்கிறது என்பதை காது கொடுத்து கேளுங்கள்.

3 /8

மரியாதையுடன் நடத்த வேண்டும்: சண்டை, எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் நீங்கள் பேசும் தொனியை மாற்றாமல் மரியாதையாக பேசவும். 

4 /8

நகைச்சுவை: அந்த சண்டையின் தீவிரத்தை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல நகைச்சுவை செய்து, அந்த சூழலை லைட் ஆக்கலாம்.

5 /8

பேசுவதில் எல்லை: அவர்களுடன் என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள். முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் அவர்களை தொடர்பு கொள்ளவும். 

6 /8

தீர்வு: பிரச்சனைகளை மட்டுமே அவர்களிடம் பேசுவதை விட்டுவிட்டு, தீர்வுகளை காண்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

7 /8

கடந்து சென்று விடுங்கள்: உங்களிடம் அந்த நபரை எதிர்கொள்ள சக்தி இல்லை என்று தோன்றினால், அவர்களிடம் “இது குறித்து பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கடந்து சென்று விடுங்கள். 

8 /8

புரிதல்: எதிரில் இருக்கும் நபர், ஏன் இப்படி இருக்கிறார் என்பதையும் உங்களால் அவர் எந்த வகையில் பாதிக்க பட்டிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.