காதலர்கள் ‘இந்த’ 8 விஷயங்களில் லிமிட்டை தாண்டவே கூடாது!

8 Healthy Boundaries In Relationship : காதல், நட்பு, திருமணம் என எந்த உறவாக இருந்தாலும் அந்த உறவில் கண்டிப்பாக நாம் சில லிமிட் உடன் இருக்க வேண்டும். அவை என்னென்ன விஷயங்கள் தெரியுமா? 

8 Healthy Boundaries In Relationship : காதல் அல்லது கணவன்-மனைவி உறவு என எதுவாக இருந்தாலும், அதில் சீக்ரெட் இருக்க கூடாது என பலர் கூற கேட்டிருப்போம். ரகசியங்கள் இருக்க வேண்டாம் என்றாலும், ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளை புரிந்து அறிந்து வாழ்வது மிகவும் முக்கியம் ஆகும். நட்பு, காதல், திருமணம் என எந்த உறவாக இருப்பினும் அதில் சில எல்லைக்கோடுகள் (Boundaries) இருப்பது மிகவும் அவசியம் ஆகும். அப்படிப்பட்ட சில எல்லைக்கோடுகள் குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

சமூக எல்லைக்கோடு:   காதலர்கள் அல்லது கணவன்-மனைவி என இருவருக்குமே தனித்தனியாக ஒரு நண்பர்கள் குழு இருக்கும், முன்னாள் காதலர்கள் இருந்திருப்பர். இவர்களை இருவரும் சேர்ந்து சமாளிப்பது அவரவர் கைகளில் இருக்க வேண்டும். 

2 /8

நேர எல்லைக்கோடு:   இருவருமே சமமான நேரத்தினை உங்கள் உறவுக்காக செலவு செய்ய வேண்டும். ஒருவர், இன்னொருவரை காத்திருக்க வைத்தல் கூடாது. 

3 /8

பிரைவசி:   இருவருக்கும் தனிப்பட்ட பொருட்கள், அல்லது விருப்பங்கள் இருக்கும். சமூக வலைதள பாஸ்வர்ட்களை வைத்துக்கொள்வது, ஒருவர் போனை இன்னொருவர் தெரியாமல் எடுத்து பார்ப்பது போன்ற விஷயங்களை தவிர்க்கவும். 

4 /8

உடல் ரீதியான எல்லைக்கோடு:   ஒருவருக்கு தன் காதலை கட்டிப்பிடிப்பதன் மூலம் அல்லது முத்தம் கொடுப்பதன் மூலம் வெளிப்படுத்த பிடிக்கும். ஆனால், இன்னொருவருக்கு அது பிடிக்காமல் இருக்கும். எனவே, இதை மதித்து இருவரும் அந்த எல்லைக்கோட்டிற்குள் இருக்க வேண்டும்.

5 /8

தனிப்பட்ட எல்லைக்கோடு:   ஒரு சிலருக்கு, பேசிக்கொண்டே இருப்பது பிடிக்காது. இன்னும் சிலருக்கு ஒருவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருப்பது பிடிக்காது. சில நேரம் தனியாக இருக்க வேண்டும் என விரும்புவர். எனவே, அவரவர் விருப்பம் என்னவோ, அதை பார்த்து விட்டுவிட வேண்டும். 

6 /8

நிதி ரீதியான எல்லைக்கோடு:   பார்ட்னர்களில் யாரேனும் ஒருவர் எப்போதும் செலவு செய்து, இன்னொருவர் எப்போதும் பணத்தையே வெளியே எடுக்காதவராக இருக்க கூடாது. நிதி ரீதியான எந்த முடிவு எடுப்பதற்கு முன்னரும் இருவரும் நன்றாக கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. 

7 /8

உணர்ச்சி ரீதியான எல்லைக்கோடு: பார்டர்கள் இருவரும், தங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று பேசிக்கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருந்தால் அதீத கோபம், அதீத வெறுப்பு என பலவித பிரச்சனைகள் பின்னர் எழ ஆரம்பித்து விடும்.

8 /8

பேசுவதில் எல்லைக்கோடு:   சண்டையின் போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் பழி போடாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதனால், ஆரோக்கியமான வகையில் உங்கள் ரிலேஷன்ஷிப்பை மேம்படுத்திக்கொள்ள முடியும்.