Most Successful Batting Pairs In ODI Cricket: ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பேட்டிங் ஜோடிகள் என்ற பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சச்சின் டெண்டுல்கர்-சௌரவ் கங்குலி, விராட் கோலி-ரோஹித் சர்மா என இந்திய கிரிக்கெட்டர்கள் ODI போட்டிகளில் வெற்றிகரமான ஜோடிகளாக உள்ளனர்.
உலக கிரிக்கெட்டின் 'ஹிட்-மேன்' மற்றும் 'கிங்', ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவுக்காக எந்த வடிவத்தில் பேட்டிங் செய்தாலும் அபாரமான ஜோடி என்று பெயர் பெற்றவர்கள்
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது, அடித்து தூள் கிளப்பிய இரட்டையர்களின் பட்டியல் இது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்டின் பழம்பெரும் ஜோடி, 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 47.55 சராசரியுடன் 8227 ரன்கள் குவித்துள்ளது. (பட ஆதாரம்: ட்விட்டர்)
திலகரத்ன டில்ஷான் மற்றும் குமார் சங்கக்கார இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் திலகரத்ன தில்ஷானும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் இணைந்து 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5475 ரன்கள் குவித்துள்ளனர். (பட ஆதாரம்: ட்விட்டர்)
மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சிறந்த பேட்டர்களில் இந்த ஜோடி, 151 ஒருநாள் போட்டிகளில் இணைந்து 5992 ரன்கள் எடுத்துள்ளது. (பட ஆதாரம்: ட்விட்டர்)
ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹைடன் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களான ஹெய்டன் மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோர் 117 முறை ஒருநாள் போட்டிகளில் ஜோடி சேர்ந்து 5409 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர். (பட ஆதாரம்: ட்விட்டர்)
ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இந்தியாவுக்காக இன்னிங்ஸை தொடங்கிய தொடக்க ஜோடிகளில் ரோஹித் மற்றும் ஷிகர் இணைந்து 5193 ரன்கள் எடுத்துள்ளனர். (பட ஆதாரம்: ட்விட்டர்)
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உலக கிரிக்கெட்டின் 'ஹிட்-மேன்' மற்றும் 'கிங்' இருவரும் இணைந்து 85 இன்னிங்ஸ் பேட்டிங்கில் 62.47 சராசரியுடன் 4998 ரன்கள் சேர்த்துள்ளனர். (பட ஆதாரம்: ட்விட்டர்)