விஜய் ரிஜக்ட் செய்த ப்ளாக் பஸ்டர் படங்கள்! அதில் ஒன்னு அஜித் நடித்தது..லிஸ்ட் இதோ!

Tamil Movies Rejected By Actor Vijay : நடிகர் விஜய், தனக்கு வந்த சில பட வாய்ப்புகளை ரிஜக்ட் செய்திருக்கிறார். அந்த படங்கள் பிற்காலத்தில் வேறு ஹீரோக்களால் நடிக்கப்பட்டு ஹிட் அடித்தது. 

Tamil Movies Rejected By Actor Vijay : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், விரைவில் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். தற்போது GOAT படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து அவரது 69வது படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்ற தகவல் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, அவர் சில வருடங்களுக்கு முன்னர் ரிஜக்ட் செய்த படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

நடிகர் விஜய், இப்போது டாப் ஹீரோவாக வலம் வரும் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் படங்கள் சிலவற்றை ரிஜக்ட் செய்திருக்கிறார். அவை என்னென்ன தெரியுமா? 

2 /8

சிங்கம்: சூர்யா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படத்தில் நடிக்க, முதலில் விஜய்யிடம்தான் கேட்கப்பட்டது. சில காரணங்களால் ஹரி இயக்கத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது. 

3 /8

சண்டக்கோழி: 2005ஆம் ஆண்டு வெளியான சண்டக்கோழி திரைப்படத்தில் விஜய்தான் நடிக்க இருந்தார். இதில் விஜய்யும் மீனாவும் நடிக்க இருந்தனர். ஆனால், கடைசியில் விஷால் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். 

4 /8

ரன்: 2002ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படத்தில் நடிக்க அஜித் மற்றும் விஜய்யிடன்தான் முதலில் கேட்கப்பட்டதாம். ஆனால், சில காரணங்களால் இதில் மாதவன் இறுதியில் நடித்தார்.

5 /8

முதல்வன்: 1999ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம், முதல்வன். இந்த திரைப்படத்ஹ்தில் நடிக்க விஜய், ரஜினி, கமல்ஹாசன் உள்ளிடோரிடம் கேட்கப்பட்டது. ஆனால், இறுதியில் இதில் அர்ஜுன் நடித்தார். 

6 /8

2003ஆம் ஆண்டு வெளியான தூள் திரைப்படத்தில் நடிக்க விஜய்க்கு அழைப்பு சென்றது. இறுதியில் விக்ரம் ஹீரோவானார்.

7 /8

தீனா: அஜித்தின் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம், தீனா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிக்க முதலில் விஜய்தான் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால், இறுதியில் இந்த வாய்ப்பு அஜித்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. 

8 /8

அனேகன்: தனுஷ் நடிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான படம், அனேகன். இந்த திரைப்படத்தில் நடிக்க விஜய் மறுத்ததை அடுத்து, வாய்ப்பு தனுஷிற்கு சென்றது.