பிரைம் ஓடிடி தளத்தில் அனல் பறக்கும் கங்குவா படவரவேற்பு..பில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிட சாதனை!

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியானது. ரசிகர்களிடையே பெரிதான வரவேற்பு இல்லையென்றாலும் ஒடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சூர்யா கடந்த சில ஆண்டுகளாகப் படம் நடிக்காமலிருந்து தற்போது சிவா கூட்டணியில் பிரம்மாண்டமான திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். சூர்யாவுக்கு எதிர்பார்க்காத வெற்றி இதில் கிடைக்கும் என்ற  நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் அவர் நினைத்ததைவிட மிகக்குறைவான வரவேற்பு இப்படத்தில் கிடைத்துள்ளது. பிரைம் ஓடிடி தளத்தில் அட்டகாசமான வரவேற்பை தொடங்கிய கங்குவா திரைப்படம். 

1 /8

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே ரொம்பவே குறைவான வரவேற்பை கங்குவா படக்குழுவினர் இதில் கண்டனர்.

2 /8

பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஏற்கனவே தமிழில் நடித்த அனுபவம் உண்டு. மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக  “கங்குவா” படத்தில் இணைந்து நடித்துள்ளார். 

3 /8

பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், கேஜிஎப் அவினாஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தாலும் இப்படத்தில் ரசிகர்கள் மனதில் குறைவான இடத்தை பிடித்தனர். 

4 /8

ஓடிடி தளத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் முன் குறைவான வரவேற்பைப் பெற்றுவந்தாலும் ஒடிடி தளத்தில் அதிக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.   

5 /8

திரையரங்குகளில் வெளியான கங்குவா படத்தின் வசூலில் தோல்வியடைந்தாலும் ஓடிடி தளத்தில் மாஸான வரவேற்பு வருவதாகத் தகவல் சொல்லப்படுகிறது. 

6 /8

பிரைம் ஒடிடி தளத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் ஒரே வாரத்தில் பில்லியன் ஸ்டிரீமிங் minutes பெற்று சாதனைப்படைத்துள்ளது. இப்படக்குழுவினர் திரையரங்குகளில் பார்க்காத வெற்றி சாதனையை ஓடிடி தளத்தில் கண்டுள்ளனர். 

7 /8

கோலிவுட்டின் சூர்யா நடித்த பான் - இந்தியா படமான கங்குவா படம் திரையரங்கில் வெளியானது. பட வெளியீட்டிற்கு முன்னரே படக்குழுவினர் 2000 கோடி வசூல் செய்யும் என்று தெரிவித்த நிலையில் அதற்கு எதிர்மறையாகவே வசூல் வேட்டை கொஞ்சம் மந்தமாகவே ஓடியது.

8 /8

கங்குவா படத்தின் பட்ஜெட் 350 கோடி ஆனால் இதில் பெற்ற வசூலோ ரொம்பவே குறைவுதான். திரையரங்குகளில் முதல் நாளிலிருந்து வார இறுதி வரை ரசிகர்களின் வருகை மிகக் குறைவாக இருந்து வந்தது.