GST அமலுக்கு வந்த 7 ஆண்டுகளில் விலை குறைந்த பொருட்கள்! ஆச்சரியம் ஆனால் உண்மை!

GST On Food Items : ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாவு உட்பட பல பொருட்களின் விலை குறைந்தது. டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்கு முன்பை விட குறைவான வரி செலுத்த வேண்டியுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஜூலை 1, 2017 அன்று அமலுக்கு வந்த பிறகு, பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர்.

1 /8

2017ம் ஆண்டு அமலுக்கு வந்த ஜிஎஸ்டியில், 17 உள்ளூர் வரிகள் மற்றும் கட்டணங்கள் இதில் சேர்க்கப்பட்டன.   

2 /8

கடந்த ஏழு ஆண்டுகளில், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதம் குறைந்துள்ளதாகவு, சில பொருட்களுக்கு வரியே இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?  

3 /8

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின்கீழ் செயல்படும் வரி வாரியமாகும். 

4 /8

இந்தியாவில் நான்கு வகையான ஜிஎஸ்டி அமலில் உள்ளன. அவை, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST), மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST), மற்றும் யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UTGST) ஆகியவை ஆகும். 

5 /8

தயிர், மோர் மற்றும் தேன் மீதான வரி 4 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாகிவிட்டது

6 /8

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜிஎஸ்டி அமலுக்கு முன்னதாக 3.5 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பிறகு, கோதுமை மாவுக்கான வரி நீக்கப்பட்டது 

7 /8

தேன் மீதான வரி ஜிஎஸ்டிக்கு முன்னர் 6 சதவீதமாக இருந்தது, தற்போது தேனுக்கு வரி இல்லை

8 /8

சோப்பு மற்றும் பற்பசைக்கு வரி 27 சதவீதத்தில் இருந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இந்த பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.