தளபதி விஜய்யுடன் இணையும் ஷங்கர்? அரசியல் சார்ந்த கதையா?

தளபதி விஜய்யின் ஆக்‌ஷன் படமான 'லியோ' அக்டோபர் 19 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.  சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு அடைந்தது.

 

1 /5

விஜய் தனது லியோ படத்திற்கான பணிகளை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 'தளபதி 68' படப்பிடிப்பைத் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது.  

2 /5

இதற்கிடையில், 'தளபதி 69' படத்தை இயக்க இயக்குனர் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 'தளபதி 70' படத்தை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கர் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

3 /5

விஜய்யை வைத்து ஷங்கர் இயக்கும் படம் அரசியல் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு  ஷங்கர் மூன்று கதைகளைச் சொன்னதாகவும் ஆனால் விஜய்க்கு அதில் ஆர்வம் இல்லை என்ற செய்தி வைரலாகி வருகிறது.  

4 /5

2014ல் தளபதி விஜய்யை ஹீரோவாகவும், சியான் விக்ரம் வில்லனாகவும் ஷங்கர் ஒரு மல்டிஸ்டாரர் ஸ்கிரிப்டை உருவாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் 2017ல் 'முதல்வன் 2' ஐடியா மற்றும் 2018ல் 3D அறிவியல் புனைகதை ஸ்கிரிப்டைக் சொன்னதாகவும் கூறப்படுகிறது.  

5 /5

ஆனால் இந்த திட்டங்கள் நிறைவேறவில்லை. இப்போது தளபதி 70க்கு, ஷங்கர் ஒரு மாஸான அரசியல் த்ரில்லருடன் வந்துள்ளார், ஆனால் இன்னும் இந்த படம் உறுதியாகவில்லை.