பாலிவுட்டில் பிரபலமானவரும், தமிழில் ஒரே ஒரு படத்தை மட்டும் நடித்த நடிகையுமான தனுஸ்ரீ தத்தா இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், அவர் குறித்த தொகுப்பை இதில் காணலாம்.
தனுஸ்ரீ தத்தா, 1984ஆம் ஆண்டு, அப்போது பீகார் மாநிலத்தில் இருந்த (தற்போது ஜார்க்கண்ட்) ஜம்ஷத்பூர் நகரில் பிறந்தவர்.
ஆரம்பத்தில் மாடலாக பணிபுரிந்த இவர், தனது 20 வயதில் அதாவது 2004ஆம் ஆண்டில், ஃபெமினா மிஸ் இந்தியா யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.
அதே, 2004ஆம் ஆண்டில் ஈக்வடார் நாட்டில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியிலும், இந்தியா சார்பாக போட்டியிட்டார். அதில் மொத்தம் 133 நாடுகள் பங்கேற்றன. அதில், இவர் டாப் 10 அழகிகளில் ஒருவராக இடம்பெற்றார்.
இவர். 2005ஆம் ஆண்டில், பாலிவுட்டில் அறிமுகமானார். ஆஷிக் பனாயா அப்னே படத்தில் அறிமுகமாகி, பிரபலமடைந்தார். இவர், அடுத்து தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாலும் தொடர்ந்து, இந்தி படங்களில் கவனம் செலுத்தினார்.
பின்னர், 2008ஆம் ஆண்டில் தமிழில், விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதுதான் அவர் நடித்த ஒரே தமிழ் படம்.
இவர் பிரபல இயக்குநர் நானே படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்த பின்னர்தான், இந்தியாவில் மீ டூ இயக்கம் வலுபெற்று பல குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.
தற்போது இவரை 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.