ஆச்சர்யம்; ஆனால் உண்மை.. விஜய் கோவிலை ஒத்திருக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்..!

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி சாளுக்கிய மன்னர், விதிஷாவில் கட்டிய விஜய் கோவிலை போலவே இருக்கிறது என்பது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

டிசம்பர் 10 ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜையும் நிகழ்த்தினார். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தை வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்படுவதை தவிர, மற்ற எல்லா வழிகளிலும் அழகாக கட்டமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 /5

இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி சாளுக்கிய மன்னர், விதிஷாவில் கட்டிய விஜய் கோவிலை போலவே இருக்கிறது என்பது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த படங்கள் வைரலாகி வருகின்றன. விஜய் கோயில் மற்றும் இந்தியாவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இரண்டுமே முக்கோண வடிவத்தில் உள்ளன.

2 /5

விஜய் கோவில் மற்றும் இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்க்கும் போது ஒரே மாதிரியாக உள்ளது. விஜய் கோவில் சாளுக்கிய வம்சத்தை சேர்ந்த மன்னர் கிருஷ்ணா வச்சஸ்பதியால் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் கட்டப்பட்டது. ஆனால் பின்னர் முகலாய பேரரசர் அவுரங்கசீப் இந்த கோயிலைத் தாக்கி அதை உடைத்தார்.

3 /5

விஜய் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக, மிகவும் புகழ் பெற்ற கோவிலாக இருந்தது,  முகலாய பேரரசர்களின் கண்களை உறுத்தியது. அவுரங்கசீப் இந்த கோயிலை பீரங்கியால் தகர்த்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதன் மீது படையெடுத்து பல முறை கோயிலைக் கொள்ளையடித்து உடைத்தனர். ஆனால் பக்தர்கள் ஒவ்வொரு முறையும் அதை மீண்டும் கட்டினர்.

4 /5

மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் அமைந்துள்ள விஜய் கோவில் நம் நாட்டின் பண்டைய பாரம்பரியமாகும். தற்போது, ​​இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளது. இந்த கோயிலின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு இரண்டும் ASI பொறுப்பு ஆகும்.

5 /5

விஜய் கோவில் அருகே தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கீர்த்திமுக் என்னும் சிற்பத்தையும் தொல்பொருள் துறை கண்டறிந்துள்ளது. சிங்கத்தின் முகங்களையும், அழகிய வேலைபாடுகளையும் கொண்டு செதுக்கப்பட்ட இந்த சிற்பம் கீர்த்திமுக் என்று அழைக்கப்படுகின்றன.