ஊதா பழங்கள் மற்றும் காய்கறிகளின் நன்மைகள்: தற்போதைய காலகட்டத்தில், பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், பல்வேறு வகையான தொற்று மற்றும் நோய்களுக்கு நாம் பலியாகி வருகிறோம். அத்தகைய சூழ்நிலையில் நாம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மற்றும் உங்கள் தினசரி உணவில் ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்ப்பது முக்கியம் ஆகும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர், சில ஊதா பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கமான உணவாக சாப்பிட்டால், பல நோய்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்.
ஊதா காய்கறிகள்: சமீப காலமாக ஊதா நிற காய்கறிகளின் மோகம் மிகவும் அதிகரித்துள்ளது, ஏனெனில் அவை சுவையாக மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் மிகவும் நன்மை பயக்கும்.
பீட்ரூட்: பீட்ரூட் ஆரோக்கியமான உணவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் உணவாக இதை சாப்பிட பல சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
கொடித்தோடை: கொடித்தோடை பழம் அதிகம் பிரபலமடையாத பழமாகும். இதன் அறிவியல் பெயர் Passiflora edulis ஆகும். இதன் மேல் பகுதி ஊதா நிறத்திலும், உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதை சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஊதா முட்டைக்கோஸ்: ஊதா முட்டைக்கோஸ் உடலில் வீக்கத்தைக் குறைப்பதிலும் சில வகையான புற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இதன் சுவை பச்சை முட்டைக்கோசின் சுவையை போல் தான் இருக்கம்.
ஊதா நிற கேரட்: நீங்கள் சிவப்பு மற்றும் ஆரஞ்சு கேரட்டை பல முறை சாப்பிட்டு இருப்பீர்கள், ஆனால் ஊதா நிற கேரட்டை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இதை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும். உங்கள் செரிமானம் சிறப்பாக இருக்கும் மற்றும் வயிற்று பிரச்சனைகள் இருக்காது.