இந்தியாவில் அதிகளவில் விற்பனையாவது இந்த பீர்கள் தான்!

இந்திய சந்தையில் பிரபலமாக விற்கப்படும் சில பீர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 

உலகளவில் குறிப்பாக இந்தியாவில் பீர் அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, அதன் அடிப்படையில் இந்தியாவில் பிரபலமாக விற்கப்படும் டாப் 10 பிராண்டட் பீர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.  பொதுவாக பீர் ஆனது பிராந்தி, விஸ்கி போன்ற சில மதுபானங்கள் போல் அதிகளவில் போதையை உண்டுபண்ணாது, குறைந்த அளவிலும் அதே சமயம் மெதுவாக தான் போதை ஏற செய்யும். அதனாலேயே இளைஞர்கள் பலரும் பெரும்பாலும் பீர்களையே அருந்துகின்றனர்.  இந்தியாவில் ஆண்கள், பெண்கள் என தொழிலதிபர்கள் பலர் பீர் உற்பத்தியில் முதலீடு செய்து வருகின்றனர்.  இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் சில பீர் வகைகள் அதிக பிரசித்தி பெற்றுள்ளது.  தற்போது இந்தியாவில் பிரபலமாக விற்கப்படும் டாப் 10 பீர் பிராண்டுகளை பற்றி இங்கே காண்போம்.

 

1 /10

1) கிங்ஃபிஷர் : இந்திய சந்தையில் கிங்ஃபிஷர் பிராண்ட் பீர்கள் 40% பங்கை கொண்டு சிறந்த இடத்தை வகிக்கிறது.  இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் பீர்களின் பட்டியலில் இந்தவகை பீர்கள் முதலிடம் வகிக்கின்றன.  இந்த கிங்ஃபிஷர் ஆனது எஃப்சி கோவா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சவுத்தாம்ப்டன் எஃப்சி போன்ற பல விளையாட்டு குழுக்களின் ஸ்பான்சர்களாகவும் இவை விளங்குகின்றன.  இந்த பிராண்டை சேர்ந்த பீர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது 60க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கிடைக்கிறது.  இதில் சிறந்ததாக கருதப்படுவது கிங்ஃபிஷர் ஸ்ட்ராங்-8% ஏபிவி, கிங்ஃபிஷர் நீலம்-8% ஏபிவி, கிங்ஃபிஷர் பிரீமியம்-4.5% ஏபிவி, கிங்ஃபிஷர் அல்ட்ரா-5% ஏபிவி பிராண்ட் தான்.  பெரும்பாலான மக்கள் பர்கர், கபாப் மற்றும் சில இந்திய உணவுகளுடன் சேர்த்து இதனை குடிக்கின்றனர்.  

2 /10

2) கார்ல்ஸ்பெர்க் : இந்தியாவில் சமீபகாலமாக இந்த வகை பீர்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளது, இவை மற்ற பீர்களை போல கசப்புத்தன்மை அதிகமாக இல்லாமல் சிறந்த சுவையுடன் வருகிறது.  இந்த வகை பீர்கள் ரஷ்யா, லாட்வியா, சீனா போன்ற பல நாடுகளில் அதிகளவில் விற்கப்படுகிறது.    

3 /10

3) பட்வைசர் : பட்வைசர் பிராண்ட் பீர் ஆனது அதன் பிரத்யேகமான வண்ணம் மற்றும் சுவைக்காக பிரபலமாக உள்ளது.  அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஈந்த வகை பீர் ஆனது 80க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது.  இவை கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கேன்களில் கிடைக்கிறது.

4 /10

4) ஹெய்னெக்கென் : ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை பீர்கள் அதிகளவில் விற்பனையாகிறது, இது தற்போது இந்தியாவிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளது.  இதனை பலரும் விரும்பி அருந்துகின்றனர்.  

5 /10

5) டுபோர்க் : இந்தியாவில் சிறந்த பீர்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயம் தவறாமல் இடம்பிடிக்கும் பெயர் டுபோர்க்.  இதில் பிரபலமான வகைகளாக டூபோர்க் க்ரீன், டூபோர்க் லெமன், டூபோர்க் ரெட் போன்றவை கருதப்படுகிறது.  சமீபத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சராசரியாக பீர் அருந்தும் 6 பெரி ஒருவர் டூபோர்க் பிராண்ட் பீரை அருந்துகின்றனர்.

6 /10

6) ஃபாஸ்டர்ஸ் : ஆஸ்திரேலிய பிராண்டான இது இந்தியாவில் அதிகமாக விற்கப்படுகிறது.  ஆனால் இவை இந்தியாவை போன்ற ஆஸ்திரேலியாவில் பிரபலமாக விற்கப்படவில்லை.  இதனை பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தான் அருந்துகின்றனர்.  

7 /10

7) பீரா 91 : இவற்றை இந்தியாவில் பீரா 91 அல்லது பூம் பீரா என்று அழைக்கின்றனர்.  பீரா 91 ஒயிட், பீரா 91 பிளான்ட், பீரா 91 ஸ்ட்ராங், தி பைரா 91 ஆகியவை சிறந்த வகைகளாக கருதப்படுகிறது.  இதனை பெரும்பாலும் ஃபிட்னஸ் ஃப்ரீக்குகள் மதிய அல்லது இரவு உணவோடு சேர்த்து அருந்துகின்றனர்.

8 /10

8) கொரோனா எக்ஸ்ட்ரா : இந்தியாவின் சிறந்த பீர்களில் ஒன்றான கொரோனா எக்ஸ்ட்ரா பெல்ஜியத்திற்கு சொந்தமானது.  உலகம் முழுவதும் கொரோனா என்கிற பெயர் எவ்வளவு பிரபலமோ அதேபோல இந்த வகை பிராண்ட் சமீபகாலமாக இந்தியாவில் பிரபலமாக இளைஞர்களால் வாங்கப்படுகிறது.  

9 /10

9) ஹேவர்ட்ஸ் 5000 : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் போன்ற இடங்களில் இந்த வகை பீர்கள் அதிகளவில் கிடைக்கின்றன.  இவற்றின் சுவை பெரும்பாலான மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.  

10 /10

10) காட்ஃபாதர் : இந்தியாவில் அதிகளவில் விர்ப்பணியாகும் பீர்களின் பட்டியலில் இது குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகிறது.  குறிப்பாக இந்த பிராண்ட் இந்தியாவின் வடக்கு பகுதியில் அதிகளவில் விற்கப்படுகின்றன.