ஓமிக்ரானின் இந்த அறிகுறிகளால் குணமடைந்த பின்னரும் பிரச்சனைகள் தொடரும்

Omicron Symptoms: மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் டெல்டா மாறுபாட்டுக்கு ஈடாக ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஓமிக்ரானின் அறிகுறிகள் லேசானவையாக உள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் மக்கள் இது குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

1 /4

ஓமிக்ரான் காரணமாக, பலர் பல கடுமையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். முந்தைய வகைகளில் காணப்படாத சில அறிகுறிகள் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகின்றன. நோயாளிகள் குணமடைந்த பிறகும் அவர்களிடம் சில ஓமிக்ரான் அறிகுறிகள் காணப்படுகின்றன.   

2 /4

ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து மீண்டவர்களிடமும் நீண்ட கால முதுகுவலி காணப்படுகிறது. இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களில் தசை வலி பிரச்சனையும் காணப்படுகிறது. இது நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

3 /4

இந்த மாறுபாட்டில், இரவில் வியர்வை, தொண்டை வலி மற்றும் முதுகு மற்றும் இடுப்பு வலி போன்ற அதிக பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். 

4 /4

கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாட்டை இலகுவாக எடுத்துக் கொள்ள வெண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதன் அறிகுறிகளை சாதாரண ஜுரம், ஜலதோஷமாக கருதும் தவறை செய்ய வேண்டாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஓமிக்ரான் அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது அவசியமாகும்.