உலகின் மிக விலையுயர்ந்த மீன், விலை அதிகமில்லை வெறும் 3 கோடி தான்..!!

வீட்டில் மீன் வலர்க்கும் சிலரை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு அதிகபட்சம் 5-10 ஆயிரம் செலவழித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு மீனுக்கு கோடிகள் கொடுக்கத் தயாராக உள்ளவர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா... . இந்த மீனை பற்றி தெரிந்து கொள்வோம் ....

1 /5

டிராகன் மீன் உலகின் மிக விலையுயர்ந்த மீன். இது ஆசிய அரோவானா என்றும் அழைக்கப்படுகிறது.  ஒரு மீனின் விலை 2 முதல் 3 கோடி என CNBC அறிக்கை ஒன்று கூறுகிறது

2 /5

மீனை பராமரிப்பதோடு, மீனை பாதுகாப்பதற்கும் மக்கள் நிறைய பணம் செலவிடுகிறார்கள்.  அது இருக்கும் தொட்டு, சிறப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 /5

ஒரு பங்களா, சொகுசு கார் அல்லது பல கிலோ தங்கம் வாங்கும் அளவில் உள்ள பணத்தை, மீனுக்காக ஒருவர் ஏன் அதிக பணம் செலவழிக்க வேண்டும்? என நீங்கள் நினைக்கலால். ஆசிய அரோவானா நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது என்று நம்பப்படுகிறது. இது சீனாவில், இதை வைத்திருப்பது ஒரு கவுரவ சின்னமாகவும் கருதப்படுகிறது.

4 /5

இந்த மீனுக்கு அதிக விலை கொடுக்க சீன மக்கள் தயாராக உள்ளனர். இந்த மீனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது, அதற்கு பெயர் - The Dragon Behind the Glass . இந்த மீனைப் பற்றி இந்த புத்தகத்திலேயே நிறைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

5 /5

அரோவானா ஒரு பொதுவான வளர்ப்பு மீன் அல்ல, இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது மற்றும் இது 3 அடி நீளம் வரை இருக்கும்.