இந்தியாவின் ‘இந்த’ இடத்தில் பிச்சை போட தடை! மீறினால் ஜெயில்..எங்கு தெரியுமா?

Indore City Bans Begging : இந்தியாவின் ஒரு நகரத்தில் பிச்சை போட தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

Indore City Bans Begging : இந்தியாவில், பல்வேறு மாநிலங்கள் உள்ளன. இந்த இடத்தில் எங்கு சென்றாலும் நாம் பார்க்கும் ஒரு பொதுவான விஷயம், பிச்சைக்காரர்களாக இருப்பர். கோயில்களுக்கு வெளியில், பொது இடங்களில், திருவிழாக்களில் என அனைத்து இடங்களிலும் இவர்கள் இருப்பர். சிலர், மனம் வந்து இவர்களுக்கு பிச்சை போடுவதுண்டு. சிலர், அவர்களை கண்டும் காணாமல் செல்வதுண்டு. இங்கு ஒரு இந்திய மாநிலம் பிச்சை போடுவதற்கு தடை விதித்திருக்கிறது. அது எந்த மாநிலம் என்பதையும், இதே போல வேறு எந்த நாடுகளில் பிச்சை எடுப்பதற்கு தடை விதித்திருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம். 

1 /7

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில், பிச்சை போடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல எந்த இடத்தில் எல்லாம் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?

2 /7

ஹங்கேரி நாட்டில் பிச்சை எடுக்கவும், குப்பைகளில் இருந்து உணவு சேகரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 /7

டாஸ்மேனியா: ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மேனியா நகரில், பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுமாம். 

4 /7

போலாந்து: இந்த நாட்டில் பொய் கூறி பிச்சை எடுத்தால் பெரிய குற்றமாம். 

5 /7

ஃப்ரான்ஸ்: இந்த நாட்டில், பிறரை வலுக்கட்டாயப்படுத்தி பிச்சை போட சொல்வது குற்றமாகும். அப்படி செய்தால் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுமாம். 

6 /7

டென்மார்க்: டென்மார்கில் பிச்சை எடுப்பது குற்றமாம். இதற்கு தண்டனையாக 14 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்படுமாம். 

7 /7

கத்தார்:  கதாரில் பிச்சை எடுப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுமாம். இது, தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டமாகும்.