உங்க பழைய போனை விற்க போறீங்களா... சிக்கல் ஏற்படாமல் இருக்க இதை செய்ய மறக்காதீங்க...

ஸ்மார்ட் போன் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், தினம் தினம் பல புதிய போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அதோடு ஸ்மார்ட்போன்களின் ஆயுள் காலமும், ஒரு சில ஆண்டுகள்தான் என்பதால், அடிக்கடி போன் மாற்றும் நிலையும் ஏற்படுகிறது.

ஸ்மார்ட் போன்கள் அத்யாவசிய பொருளாக மாறிய நிலையில், அவ்வப்போது வரும் சிறந்த அம்சம் கொண்ட மாடலை வாங்குவதற்காக, நாம் பழைய ஃபோன்களை விற்கிறோம் அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் புதிய போன் வாங்க பழைய போனை கொடுக்கும் பழக்கமும் உள்ளது.

1 /9

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்: ஸ்மார்ட் ஃபோன்களின் காலமான இது, நமது வாழ்க்கையை பல வகையில் எளிமையாக வைத்துள்ளது. அன்றாடம் அறிமுகப்படுத்தும் புதுப்புது மாடல்களை வாங்க ஈர்க்கப்படும் பலர், எக்ஸ்சேஞ்ச் ஆபர் மூலம் தங்கள் பழைய போனை கொடுத்துவிட்டு புதிய போனை வாங்கும் பழக்கம் உள்ளது.

2 /9

சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க: ஸ்மார்ட் போனை விற்பதற்கு முன் அல்லது கொடுப்பதற்கு முன் நாம் மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்கள், நம்மை சைபர் மோசடிக்கு ஆடாமல் பாதுகாக்கும். அலட்சியமான போக்கு சில சமயம் ஆபத்தானதாக மாறலாம்.

3 /9

யுபிஐ செயலிகள்: பழைய ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது அல்லது விற்கும்போது, அதில் உள்ள யுபிஐ செயலிகள் அனைத்தையும் அன்இன்ஸ்டால் செய்து நீக்க வேண்டும். இல்லை என்றால் சைபர் மோசடிக்கு ஆளாக நேரிடும்.

4 /9

பேக்கப் மற்றும் ரெஸ்டோர்: உங்கள் போனில் உள்ள தொடர்பு தகவல்கள், எஸ்எம்எஸ் தகவல்கள், அழைப்புகள் தொடர்பான பதிவுகள் போன்ற அனைத்தையும், மேக்கப் செய்து எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

5 /9

புகைப்படங்கள் மற்றும் வீடியோ: உங்கள் போனில் நீங்கள் சேமித்து வைத்துள்ள அனைத்து புகைப்படங்கள், வீடியோக்களையும், மல்டி மீடியா கன்டென்டுகளையும், தவறாமல் பேக்கப் செய்து எடுத்துக் கொள்ளவும்.

6 /9

ஃபேக்டரி ரிசெட்: உங்கள் எல்லா தரவுகளையும் பேக்கப் செய்து கொண்ட பின் ஃபேக்டரி ரீசெட் செய்வது அவசியம். ஆனால் அதற்கு முன்னால் உங்கள் கூகுள் அக்கவுண்டுகள், பிற ஆன்லைன் கணக்குகளில் இருந்து முழுமையாக லாகோ செய்வது முக்கியம்.  

7 /9

மைக்ரோ எஸ்டி கார்டு: உங்கள் ஃபோன்களில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்டை மறக்காமல் அகற்றி எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். இல்லைஎன்றால் அதிலுள்ள தரவுகள், புகைப்படங்கள், வீடியோக்கள் பிறர் கையில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.

8 /9

வாட்ஸ்அப் டேட்டா பேக்கப்: உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் டேட்டா முழுவதையும் பேக்கப் எடுப்பது முக்கியம். புதிய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்யும் போது, பேக்கப் மூலம் எளிதாக அதை ரீஸ்டோர் செய்ய முடியும்.  

9 /9

ஸ்மார்ட்போனுக்கு நல்ல மதிப்பு கிடைக்க: உங்கள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் அதன் சார்ஜிங் கேபிள், சார்ஜர், ஸ்மார்ட் போன் கேஸ் ஆகியவற்றை பத்திரமாக வைத்திருந்தால், நீங்கள் விற்கப் போகும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நல்ல மதிப்பு கிடைப்பது நிச்சயம். அதோடு ஸ்மார்ட்போனை நன்றாக பராமரித்து நல்ல நிலையில் வைத்திருப்பதும் அவசியம்.