Tokyo Paralympics 2020: டோக்கியோ பாராலிம்பிக் போட்டி நிகழ்விடங்கள் புகைப்படத் தொகுப்பு

டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற உள்ளது. போட்டிகளின் தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) நடைபெறுகிறது...

இன்று நடைபெறும் போட் டியை ஜப்பான் பேரரசர்நருஹிதோ முறைப்படி தொடங்கி வைக்கிறார்  

Also Read | டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் ஆப்கன் தேசியக் கொடி

1 /5

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இந்தியாவின் சார்பில் 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட அணியினர் ஜப்பானுக்கு செல்கின்றனர் என இந்தியாவின் சார்பில் 54 பேர் கலந்து கொள்கின்றனர் 

2 /5

இந்திய அணிக்கு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டதைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்

3 /5

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு 2020 தொடக்க விழாவில் ஆப்கானிஸ்தான் கொடி சேர்க்கப்படும் என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் தெரிவித்தார். 

4 /5

ஆப்கன் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாவிட்டாலும், ஆப்கன் கொடி போட்டியில் சேர்க்கப்பட்டது  

5 /5

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டிகளில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ் கால்பந்து, ஜூடோ, பாராகனோ, பளுதூக்குதல், படகு போட்டி, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சோ் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.