இந்த வாரத்தின் டாப் 10 சீரியல்கள்! TRPயில் முதல் இடத்தை பெற்ற தொடர் எது?

Top 10 Tamil Serials This Week : தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள், ஒரு சில தொடர்கள் இந்த வாரம் நல்ல டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கின்றன. அந்த வகையில், டாப் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல்களை பார்க்கலாமா?

Top 10 Tamil Serials This Week : தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் பெரிதளவில் வளர்ந்துவிட்டன. காலை, நன்பகம், மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும், அனைத்து சேனல்களிலும் விதவிதமான கதைக்கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இல்லத்தரசிகள் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமன்றி, அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் தமிழ் தொடர்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற தொலைக்காட்சி தொடர்களையும், அவை ஒளிபரப்பாகும் சேனல்களையும் இங்கு காணலாம். இதில், டாப் இடத்தை பெற்றிருக்கும் சீரியல் எது தெரியுமா?

1 /10

சின்ன மருமகள்: விறுவிறுப்பாக செல்லும் தொடர்களுள் ஒன்று, சின்ன மருமகள். இந்த தொடருக்கு, 5.73 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது, டாப் 10 தொடர்களில், 10ஆம் இடத்தில் இருக்கும் தொடர் இதுதான்.

2 /10

மல்லி: புதியதாக ஒளிபரப்பாகி வரும் மல்லி தொடர், இந்த வாரம் 6.92 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதனால் இதர்கு 9ஆம் இடம் கிடைத்திருக்கிறது. 

3 /10

சுந்தரி: மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொடர்களுள் ஒன்று, சுந்தரி. இந்த தொடரின் டிஆர்பி ரேட்டிங் 7.24 ஆக உள்ளது. இதனால் இதற்கு 8வது இடம் கிடைத்திருக்கிறது. 

4 /10

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: முதல் சீசன் வெற்றிகரமாக அமைய, அதே தொடரை 2வது சீசனாகவும் எடுத்திருக்கின்றனர். இந்த தொடர், குடும்ப பின்னணியை கொண்டதாக உருவாகி இருக்கிறது. இதற்கு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் 7.30 கிடைத்துள்ளது. இத்தொடர், 7வது இடத்தை பிடித்திருக்கிறது. 

5 /10

வானத்தை போல: 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தை போல. இந்த தொடர் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இது, 7.35 புள்ளிகளை பெற்று 6ஆம் இடத்தை பெற்றிருக்கிறது. 

6 /10

மருமகள்: கேப்ரியல்லா நாயகியாக நடித்து வரும் தொடர், மருமகள். இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிள் 8.05 புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் உள்ளது. 

7 /10

சிங்கப்பெண்ணே: ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை சொல்லும் தொடர், சிங்கப்பெண்ணே. இந்த தொடர் 8.07 புள்ளிகளை பெற்று டிஆர்பியில் 4வது இடத்தில் இருக்கிறது. 

8 /10

பாக்கியலக்‌ஷ்மி: குடும்ப பெண்மணிகள் படும் சிரமங்களை கூறும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் தொடர், பாக்கியலக்‌ஷ்மி. இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிள்  8.67 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் இருக்கிறது. 

9 /10

கயல்: சைத்ரா ரெட்டி-சஞ்சீவ் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் தொடர், கயல். இந்த தொடர் 3 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இது, டிஆர்பி ரேட்டிங்கிள் 8.81 புள்ளிகளை பெற்று 2வது இடம் பெற்றிருக்கிறது. 

10 /10

சிறகடிக்க ஆசை: டி.ஆர்.பி ரேட்டிங்கிள் 9.84 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற்றிருக்கும் தொடர், சிறகடிக்க ஆசை. இதில், கோமதி பிரியா, வெற்றி வசந்த் உள்ளிட்டோர் ஜோடியாக நடித்து வருகின்றனர். இளசுகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த தொடராக இருக்கிறது, சிறகடிக்க ஆசை.