தினசரி காலையில் பாதாம் பருப்பு சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

வெறும் பருப்புகளை சாப்பிடுவதை விட ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவது அதிக நன்மைகளை தருகிறது. பாதாம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.

 

1 /6

காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலு சேர்க்கிறது.  

2 /6

பாதாம் பருப்பில் குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. எனவே இவற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றன. மேலும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.  

3 /6

ஊறவைக்கப்பட்ட பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாடு, அறிவாற்றல், நினைவாற்றல் மேம்படுகிறது. தினமும் காலையில் ஆறு பாதாம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது.   

4 /6

ஊறவைத்த பாதாம் பருப்பு ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல மூலமாகும். இதனை தினசரி சாப்பிட்டு வந்தால் முழுமையான உணர்வை தந்து, அதிகப்படியான உணவை குறைக்க உதவுகிறது.   

5 /6

ஊறவைத்த பாதாம் பருப்பு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது, இது இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பைத் தவிர்க்கிறது.  

6 /6

ஊறவைத்த பாதாமில் அத்தியாவசிய தாதுக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. இது உடல் செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது.