Tigh Fat: ஆரோக்கியமாக அழகாக்கும் எடை மேலாண்மை! இடுப்பு, தொடை கொழுப்பு குறைக்க டிப்ஸ்

HIP & Tigh Fat Burn Tips: அதிகரித்த எடையை குறைக்க இயற்கையான முறையில் முயற்சிப்பது நல்ல வழியாக இருக்கும். இடுப்பு கொழுப்பை இழக்க, ஆரோக்கியமான, சீரான உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்திக் கொண்டே அழகாக மாறினால் நிம்மதி தானே?

மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தினால் இடுப்புச் சதை தானாகவே குறையும். அதோடு, ஏரோபிக்ஸ் உட்பட வழக்கமான உடற்பயிற்சி, இடுப்பு மற்றும் தொடைப் பகுதியை ஒழுங்கமைக்க உதவும்.  

1 /8

எடை மேலாண்மை என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமானது. உடல் உழைப்பு இல்லாதவர்கள் உடல் எடையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அதிகரிக்கும் எடை என்பது, உடல் நலக் கோளாறுகளை அதிகரிக்கும் என்பது உலகறிந்த உண்மை

2 /8

உடலில் கொழுப்பு அதிகரித்தால் அது ஒவ்வொரு பாகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக படிகிறது. அதிலும், கொழுப்புப் படியத் தொடங்கும்போது, அது வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் தான் தனது இருப்பை பலப்படுத்திக் கொள்கிறது. எடை அதிகரிப்பது தெரியாமல் போவதற்கும் இதுதான் காரணம்.

3 /8

அதிகமான எடையை எவ்வாறு குறைப்பது? என்பது பலருக்கும் மலைப்பான கேள்வியாக இருக்கிறது. பல்வேறு வழிகள் சொல்லப்பட்டாலும், தொடை மற்றும் வயிற்றுச் சதையை குறைக்க இந்த முறைகள் நல்ல பலனளிக்கின்றன

4 /8

கொழுப்பை கரைக்கும் வெந்தயத்தின் பண்பு எடை மேலாண்மையில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. வெந்தயத்தை அப்படியே சாப்பிடலாம், வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிடலாம். தண்ணீரில் ஊறவைத்து பானமாக பருகலாம் அல்லது முளை கட்டிய வெந்தயத்தை பச்சையாக சாப்பிடலாம். வெந்தயத்தை எப்படி சாப்பிட்டாலும் அது உடலை இளைக்கச் செய்வதுடன் வேறு பல நோய்களையும் குணமாக்கும்

5 /8

இடுப்பு சதையை குறைக்கும் க்ரீன் காபியின் அற்புத மருத்துவ குணங்கள் தற்போது பரவலாக பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. வறுத்த காபியில் இருந்து தயாரிக்கப்படும் காபியின் கெடுதல்கள் ஏதும் இல்லாமல், உடலை இளைக்க காபி உதவுகிறது. பச்சை நிற காபி கொட்டைகளில் உள்ள க்ளோரோஜெனிக் அமிலம். (Chlorogenic Acid) வளர்சிதை மாற்றங்களை அதிகப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. செல்களுக்கும் தசைகளுக்கும் ஆக்சிஜன் அளவைக் கூட்டி, புத்துணர்ச்சியைத் தருகிறது. பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, கலோரிகளையும் குறைப்பதால் உடற்பருமனைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது கிரீன் காபி.  

6 /8

உடல் எடையை குறைக்க எந்தவொரு உணவுச் சப்ளிமெண்ட் அல்லது புதிய சுகாதாரப் போக்கை பின்பற்றுவதற்குக் முன்னதாக வழக்கமான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என இயல்பாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்யவும்

7 /8

ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள், சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி உட்பட, ஆரோக்கியமான எடையை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் முக்கியமானது

8 /8

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை