இந்தியாவில் அதிகமாக மது குடிக்கும் 7 இந்திய மாநிலங்களின் பட்டியலை பாரக்கலாம்.
சீனா, ரஷ்யாவுக்குப் பிறகு உலகின் மூன்றாவது மிகப்பெரிய மதுபானங்களுக்கான சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் மது நுகர்வு எண்ணிக்கை முன்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
உயர் வகுப்பினரால் கடைபிடிக்கப்படும் ஒரு வாழ்க்கை முறையாக மது குடிப்பது இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் இருக்கிறது. இன்னொருபுறம் மன அழுத்தத்தை போக்குவதற்காக குடிக்கப்படுகிறது. இந்தியாவில் குடிப்பழக்கம் அதிகரிப்பதற்கு இன்னொரு காரணம் மது எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளது. அதாவது மது சந்தைப்படுத்துதல் எளிமையாக இருக்கிறது.
இந்நிலையில், தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் இந்தியாவில் குடிப்பழக்கம் குறித்த தரவு வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் பெண்கள் அதிகம் மது குடிக்கும் விவரம் தெரியவந்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் அதிகம் மது குடிக்கும் பெண்கள் உள்ள டாப் 7 மாநிலங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தெலுங்கானா - தென்னிந்திய மாநிலத்தில், 6.7% பெண்கள் மது அருந்துகின்றனர், கிராமப்புற பெண்கள் நகர்ப்புறங்களில் உள்ளவர்களை விட அதிகமாக பயன்படுத்துகின்றனர். இது தெலுங்கானாவில் கிராமப்புற பெண்களிடையே மது அருந்துவதைப் பிரதிபலிக்கிறது.
சிக்கிம் - சிக்கிமில், 16.2% பெண்கள் மது அருந்துகின்றனர். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் வீட்டிலேயே மது உற்பத்தி செய்யப்படுகிறது. இது தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் பாரம்பரியம். சிக்கிமில் மது அருந்துவது கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
ஜார்கண்ட்- ஜார்கண்டில், 6.1% பெண்கள் மது அருந்துகிறார்கள். பல ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கும் மாநிலம் இது. வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், இந்தச் சமூகங்களில் பலர் தங்கள் சவால்களைச் சமாளிக்க மது குடிக்கின்றனர்
சத்தீஸ்கர் - சத்தீஸ்கரில் சுமார் 5% பெண்கள் மது அருந்துகிறார்கள். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாதது ஆகியவை பெண்கள் மது குடிக்க காரணமாகும்.
அசாம் - அசாமில் 7.3% பெண்கள் மது அருந்துகின்றனர். முதல் இரண்டு வடகிழக்கு மாநிலங்களைப் போலவே, அசாமின் பழங்குடி சமூகங்களும் மது காய்ச்சும் மற்றும் உட்கொள்ளும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. அவர்களுக்கு மது அருந்துவது ஒரு சடங்கு, வாழ்க்கை முறையும் கூட.
அருணாச்சல பிரதேசம் - அருணாச்சல பிரதேசத்தில், 15-49 வயதுடைய பெண்களில் 26% பேர் மது அருந்துகின்றனர். இதற்கு மாநிலத்தின் கலாச்சாரம் காரணமாக உள்ளது, அங்கு மது அருந்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. விருந்தினர்களுக்கு "அபோங்" என்று அழைக்கப்படும் அரிசி பீர் வழங்கும் வழக்கம் இப்பகுதியில் உள்ள இனக்குழுக்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் - இந்த பட்டியலில் உள்ள ஒரே யூனியன் பிரதேசம். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 5% பெண்கள் மதுபானங்களை உட்கொள்கிறார்கள். இது சமூக பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் உள்ளிட்டவை காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகிறது.