திருப்பதி கோயிலில் ஜூன் 30ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து... தேவஸ்தானம் அறிவிப்பு..!!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இங்கு சாதாரண நாட்களில் கூட கூட்டம் அதிகமாக இருக்கும்

திருப்பதி கோயில், சாதாரண நாட்களிலேயே அதிக கூட்டம் இருக்கும் நிலையில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். 

1 /8

தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருவதால், இலவச தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

2 /8

திருப்பதி தேவஸ்தானம் தினமும் 20,000 பேருக்கு ரூ.300க்கான சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்து வந்தது. மேலும், தரிசனத்திற்காக தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது. ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

3 /8

தேவஸ்தான நிர்வாகம் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை செய்து கொடுத்து வருகிறது.

4 /8

திருப்பதி கோயிலில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. 

5 /8

வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் தங்க இடம் கிடைக்காத பக்தர்கள், பகவான் வெங்கடாஜலபதியை தரிசன செய்ய சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நிற்கும் நிலை உள்ளது

6 /8

விடுமுறை காலம் காரணமாக  திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருவதால், இலவச தரிசனத்துக்கு 24 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

7 /8

பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து, பக்தர்கள் இலவச தரிசனத்துக்கான வரிசையில் செல்ல முயற்சிக்க வேண்டாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது.

8 /8

மேலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும்  ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஜபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.