Hotel Arbezல திரும்பிப் படுத்தா, அடுத்த நாட்டில் இருப்பீங்க விசா இல்லாமலே!

உலகத்தில் பல விசித்திரமான இடங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முதன்முறையாக தெரிந்துக் கொள்ளும்போது நம்புவது மிகவும் சிரமமாகவே இருக்கும். படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது திரும்பிப் படுத்தால் அடுத்த நாட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலைப் பற்றி கேள்விப்பட்டால் ஆச்சரியம் தோன்றுவது இயல்பு தானே? அந்த விசித்திரமான ஹோட்டல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

புதுடெல்லி: உலகில் பல ஹோட்டல்கள் மிகவும் தனித்துவமானவை, அழகானவை. உலக வரைபடத்தில் (World Map) ஆடம்பரமான ஹோட்டல்களுக்கு தனிச் சிறப்பு அடையாளம் உள்ளது. அப்படி பல நூறு ஹோட்டல்கள் இருந்தாலும், ஒருவர் தூங்கும்போது திரும்பிப்படுத்தால், வேறொரு நாட்டில் இருப்பார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வித்தியாசமான ஹோட்டல் உலகில் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. அதுதான் ஹோட்டல் ஆர்பெஸ் (Hotel Arbez). இது உண்மையா? எப்படி சாத்தியமாகும் என்று தோன்றுகிறதா?  இந்த ஹோட்டலின் புகைப்படங்களையும் பாருங்கள், அதன் தனித்துவமான சிறப்பின் பின் உள்ள ரகசியத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்த ஹோட்டல் 1862 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ஹோட்டலை கட்டுவதற்கு முன்பு இந்த இடத்தில் ஒரு மளிகைக் கடை இருந்தது. பின்னர் 1921 ஆம் ஆண்டில், Jules-Jean Arbeje என்பவர் இந்த இடத்தை வாங்கி, இங்கே ஒரு ஹோட்டலைக் கட்டினார். இப்போது இந்த ஹோட்டல் பிரான்ஸ் (France) மற்றும் சுவிட்சர்லாந்தின் (Switzerland) அடையாளமாக மாறியுள்ளது. சிறப்புமிக்க இந்த ஹோட்டல் உலகின் கவனத்தை ஈர்க்கிறது.

1 /7

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் எல்லையில் அமைந்துள்ளது இந்த அற்புதமான ஹோட்டல் 'ஆர்பெஸ் பிராங்கோ சூயிஸ்' (Arbez Franco Suisse) என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில், இந்த ஹோட்டல் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் எல்லையில் உள்ள லா க்யூர் (La Cure) பகுதியில் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு இரண்டு முகவரிகள் உள்ளது தெரியுமா?  

2 /7

இந்த ஹோட்டல் இரண்டு நாடுகளில் அமைந்துள்ளது. இரண்டு நாடுகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த ஹோட்டல் ஆச்சரியம் அளிக்கும் அதிசயமான ஒன்றாகவே இருக்கிறது.

3 /7

ஆச்சரியப்படுத்தும் புகைப்படங்கள்   இந்த தனித்துவமான ஹோட்டலின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் எல்லை இந்த ஹோட்டல் வழியாக செல்கிறது. இந்த ஹோட்டலுக்குள் நுழையும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குள் நுழைகிறார்கள், விசா இல்லாமலேயே என்பது திகைப்பை ஏற்படுத்துமா இல்லையா  

4 /7

ஒரு நாட்டில் பார் மற்றும் மற்றொரு நாட்டில் குளியலறை இரு நாடுகளின் எல்லையை மனதில் கொண்டு ஆர்பெஸ் ஹோட்டல் (Arbez Hotel) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் பார் (Bar) சுவிட்சர்லாந்தில் (Switzerland) இருக்கிறது, அதில் உள்ள Bathroom பிரான்சில் (France) உள்ளது என்பது தெரியுமா? 

5 /7

அற்புதமாக கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஹோட்டலின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அதன் அனைத்து அறைகளும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஹோட்டல் அதன் ஒவ்வொரு அறைகளிலும் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையின் ஒரு பகுதியும் பிரான்சிலும், ஒரு பகுதி சுவிட்சர்லாந்திலும் உள்ளது.

6 /7

வேறு நாட்டில் இரண்டு தலையணைகள் இந்த அழகான ஹோட்டலின் அறைகளில் உள்ள Double Bed பற்றி சுவராசியமான தகவலும் உண்டு. படுக்கையின் பாதி பிரான்சிலும் பாதி சுவிட்சர்லாந்திலும் உள்ளன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அறைகளில் உள்ள தலையணைகள் இரு நாடுகளின் வழக்கத்தின்படி பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

7 /7

இந்த ஹோட்டல் 1862 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ஹோட்டலை கட்டுவதற்கு முன்பு இந்த இடத்தில் ஒரு மளிகைக் கடை இருந்தது. பின்னர் 1921 ஆம் ஆண்டில், Jules-Jean Arbeje என்பவர் இந்த இடத்தை வாங்கி, இங்கே ஒரு ஹோட்டலைக் கட்டினார். இப்போது இந்த ஹோட்டல் பிரான்ஸ் (France) மற்றும் சுவிட்சர்லாந்தின் (Switzerland) அடையாளமாக மாறியுள்ளது. சிறப்புமிக்க இந்த ஹோட்டல் உலகின் கவனத்தை ஈர்க்கிறது.