Big Tamil Movies 2024 : இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தமிழ் படங்களும் அதன் ரிலீஸ் தேதிகளும்!

Big Tamil Movies 2024 And Their Release Dates : தமிழ் திரையுலகில், இந்த ஆண்டில் பல பெரிய படங்கள் வெளிவர இருக்கின்றன. இவற்றின் ரிலீஸ் தேதிகளை இங்கு பார்க்கலாம். 

Big Tamil Movies 2024 And Their Release Dates : 2024ஆம் ஆண்டின் ஜூன் மாதமே வரப்போகிறது. ஆனால், இன்றளவும் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. காய்ந்து போன கடலாக இருக்கும் கோலிவுட்டில் அவ்வப்போது சிற்றாறு போல குறைந்த பட்ஜெட் படங்கள் ஓடி ஹிட் அடித்து வருகின்றன. 2024ஆம் ஆண்டின் முதல் பாதி இப்படி வறண்டு கிடக்க, அடுத்த பாதியில்தான் அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களும் வெளியாக இருக்கின்றன. அந்த படங்களின் லிஸ்டையும், அவை எந்தெந்த தேதிகளீல் வெளியாகின்றன என்பதையும் இங்கு பார்ப்போம்.

1 /14

விடுதலை பாகம் 2: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடுதலை பாகம் 2. இதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம், இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

2 /14

விடாமுயற்சி: அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம், விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் ரிலீஸ் தேதி இந்த ஆண்டின் தீபாவளியை ஒட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. 

3 /14

வேட்டையன்: ரஜினிகாந்த ஹீரோவாக நடித்து வரும் படம், வேட்டையன். இதனை டி.ஜே.ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4 /14

தக் லைஃப்: கமல்ஹாசனும் மணி ரத்னமும் 35 ஆண்டுகளுக்கு பிறகு கைக்கோர்த்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றன. இதன் ரிலீஸ், இந்த ஆண்டின் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /14

தங்கலான்: விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், தங்கலான். இதனை பா.இரஞ்சித் இயக்கியிருக்கிறார். இந்த படம், வரும் ஜூலை மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /14

ராயன்: நடிகர் தனுஷ், எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் ராயன். இதில் இவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி அல்லது  ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

7 /14

மெய்யழகன்: கார்த்தி-அரவிந்த் சாமி நடித்து வரும் படம், மெய்யழகன். இந்த படத்தை ‘96’புகழ் பிரேம் குமார் டைரக்டு செய்கிறார். இதன் ரிலீஸ், வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் ஆகிய தேதிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

8 /14

மகாராஜா: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம், மகாராஜா. இதனை நிதிலன் சுவாமினாதன் இயக்குகிறார். இப்படத்தின் ரிலீஸ், வரும் ஜூன் 13ஆம் தேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

9 /14

LIC:  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் படம், எல்.ஐ.சி. இதன் முழு பெயர், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன். இந்த படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

10 /14

கவின் 5: வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் கவின், தனது 5வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம், வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

11 /14

கங்குவா: சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம், கங்குவா. பல கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

12 /14

இந்தியன் 2: ரசிகர்கள், இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 5 ஆண்டு காலங்களாக காத்திருந்து வருகின்றனர். இந்த படத்தில் கமல் சேனாபதி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

13 /14

GOAT - The Greatest Of All Time: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், கோட். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படம், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

14 /14

அமரன்: புல்வாமா தாக்குதலையும், அதில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது அமரன் படம். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம், வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.