Vani Bhojan: சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை வாணி போஜன்.
தெய்வமகள் எனும் சீரியலில் சிறப்பாக நடித்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவரை அவ்வப்போது சிலர் சின்னத்திரை நயன்தாரா எனவும் கூறுவது உண்டு.
வாணி போஜன், ஓ மை கடவுளே எனும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் செங்களம் எனும் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்
வாணி, இந்தோனேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு இருக்கும் பாலி எனும் கடற்கரையின் அருகே உள்ள இடங்களில் பல சாகச செயல்பாடுகளிலும் அவர் ஈடுபடுள்ளார். அவர் பைக் ஓட்டும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.
தனது சாகசங்களின் போது எடுத்த புகைப்படங்களை வாணி பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.