இந்தியன் 2 படத்தால் கார்த்தியின் ஜப்பான் படத்தில் பெரிய மாற்றம்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருக்கும் கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' படத்தில் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

 

1 /5

ராஜு முருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினம் தயாரிப்பில் உருவாகிவரும் ஜப்பான் படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.  இப்படத்தின் டீசர் கார்த்தியின் பிறந்தநாளான மே 25 அன்று வெளியிடப்பட்டது.  

2 /5

'ஜப்பான்' படப்பிடிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பணியாற்றிய நிலையில், தற்போது அவருக்கு பதிலாக  சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக மாற்றப்பட்டு இருக்கிறார்.  

3 /5

'ஜப்பான்' படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் விலகியதற்கான காரணம் 'இந்தியன்-2' படம் தான் என்று கூறப்படுகிறது.  ஏனெனில் 'இந்தியன்-2' படத்திலும் ரவிவர்மன் தான் ஒளிப்பதிவாளராக இருந்து வந்ததால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகினார்.  

4 /5

'ஜப்பான்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.  மேலும் இந்த படத்தில் சுனில், விஜய் மில்டன் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.  

5 /5

கார்த்தியின் 'ஜப்பான்' படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் படங்களுக்கு கடும் போட்டியை இப்படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.