Vatican: இராக்கிற்கு செல்லும் முதல் போப்பாண்டவர் Pope Francis

ஈராக்கிற்குக்கு பயணிக்கும் முதல் போப்பாண்டவர் என்ற வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியுள்ளார் போப் பிரான்சிஸ்.

2012இல் போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, போப் பிரான்சிஸ் மேற்கொள்ளும் மிகவும் ஆபத்தான வெளிநாட்டு பயணம் இது. வெள்ளிக்கிழமையன்று இந்த முக்கியமான பயணத்தை மேற்கொண்ட போப் பிரான்சிஸ் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார், ஈராக் இவ்வளவு காலமாக துன்பப்பட்டதால், அங்கு "அடையாள" பயணத்தை மேற்கொள்வது கடமை என்று உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read | Meghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ?

1 /4

அலிட்டாலியா விமானத்தில் போப், அவரது பரிவாரங்கள், ஒரு பாதுகாப்பு குழுவினர் மற்றும் சுமார் 75 பத்திரிகையாளர்கள் என அனைவரும் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் மதியம் சுமார் 2 மணிக்கு வந்து இறங்கினார்கள்.   (Photograph:Reuters)

2 /4

பாக்தாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் போப் பிரான்சிஸை ஈராக் அதிபர் பர்ஹாம் சலே (Barham Saleh) வரவேற்றார். 84 வயதான போப்பாண்டவரின் பாதுகாப்புப் பணியில், ஆயிரக்கணக்கான கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்களை ஈராக் நியமித்துள்ளது. ராக்கெட் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நிகழலாம் என்ற அச்சங்களுக்கு மத்தியில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

3 /4

பாரம்பரிய ஆடைகளை அணிந்த ஈராக்கிய குழந்தைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் போப் பிரான்சிஸை வரவேற்றனர். அப்போது, பாதுகாப்பு முகக் கவசங்கள் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது உறுதிபடுத்தப்பட்டது.   (Photograph:AFP)

4 /4

இராக்கில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்சிஸ், விமானம், ஹெலிகாப்டர் மற்றும் கவச வாகனம் மூலம் முக்கிய நான்கு நகரங்களுக்கு செல்வார்.  பாக்தாத் தேவாலயத்திற்கு சென்று அங்கு பிரார்தனை செய்வார். ஈராக்கின் உயர்நிலை ஷியா முஸ்லீம் மதகுருவை நஜாப் நகரில் சந்தித்து கலந்துரையாடிய பிறகு, போப் பிரான்சிஸ் மொசூல் நகருக்குச் செல்வார். மொசூல் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக இருந்ததும், அங்குள்ள தேவாலயங்களும் பிற கட்டடங்களும் மோதலின் வடுக்களைத் சுமந்துக் கொண்டு போரின் வலிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ரன என்பதும் குறிப்பிடத்தக்கது. (Photograph:AFP)