Ind vs Eng: சலிக்காமல் சண்டையிடும் Ben Stokes, வலிக்காமல் திருப்பித் தரும் Team India

IND vs Eng: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது 2–1 என்ற நிலையில் உள்ளது. இறுதி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 

இந்த தொடரில் இரு அணியின் வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிக்கொண்டிருப்பதால், அவ்வப்போது வீரர்களுக்கு இடையில் சிறிய சண்டைகளும் வாக்குவாதங்களும் காணக்கிடைக்கின்றன. குறிப்பாக, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்த தொடர் முழுவதும் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். மேலும் இந்திய அணியின் வீரர்களுடன் பலமுறை சண்டையிட்டார். இவர் ஈடுப்பட்ட நான்கு அப்படிப்பட்ட வாக்குவாதங்களை இங்கே காணலாம். 

1 /4

சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரிஷப் பந்த் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையே பரபரப்பான விவாதம் நடைபெற்றது. விஷயம் எல்லை மீறுவதை கண்டு, நடுவர்கள் தலையிட்டு நிலைமையை சரி செய்து இருவரையும் சமாதானப்படுத்தினர். 87 ஆவது ஓவரில் பந்துகளுக்கு இடையே நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் கோபமுற்ற ஸ்டோக்ஸ் பந்திடம் வந்து இதைப் பற்றி கேட்டார்.

2 /4

மூன்றாவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சின் போது பென் ஸ்டோக்ஸ் 24 வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில், ஸ்டோக்ஸ் கவனத்தை இழந்து, அஸ்வின் பந்து வீசுவதற்கு முன்பு ஆட்டத்திற்கு தயாராக அதிக நேரம் எடுத்தார். இதற்கிடையில், பின்னால் நின்ற விராட் கோலி ஸ்டோக்ஸிடம் வந்து ‘வந்து ஆடுங்கள் நண்பரே, எல்லாம் நன்றாக இருக்கிறது’ என்றார். ஸ்டோக்சின் செய்கையால் கோலி கடுப்பானார் என்பது நன்றாகத் தெரிந்தது.

3 /4

இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டின் முதல் நாளில், இந்திய அணி அதிரடியாக ஆடியது. ஜோ ரூட்டின் அணி டெஸ்ட் வரலாற்றில் நான்காவது மிகக் குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த பின்னர் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில், இங்கிலாந்து அணி செய்த செய்கையை யாராலும் நம்ப முடியவில்லை. இந்தியாவின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில், சும்மன் கில் அடித்த பந்து ஸ்லிப்பில் பீல்டிங் செய்த பென் ஸ்டோக்ஸிடம் சென்றது. ஸ்டோக்ஸ் பந்தைப் பிடித்தார், பின்னர் முழு அணியும் அப்பீல் செய்தது. அதன் பிறகு நடுவர் மூன்றாவது நடுவரது உதவியை நாடினார். மூன்றாவது நடுவர் வீடியோவைப் பார்த்தபோது, ​​பந்து தரையில் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது தெறிந்து பென் ஸ்டோக்சும் பிற வீரர்களும் அவுட் கிளெயிம் செய்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.

4 /4

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆங்கில ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு நடுவர்கள் வந்து இவர்களை விலக்கிவிட வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் 13 வது ஓவர் முடித்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் முகமது சிராஜிடம் ஏதோ சொன்னார். பென் ஸ்டோக்ஸின் இந்த அணுகுமுறை டீம் இந்தியாவின் கேப்டன் விராட் கோலிக்கு பிடிக்கவில்லை. இதன் பின்னர், விராட் கோலி பென் ஸ்டோக்சை எதிர்கொண்டார். நிலைமையை சரிசெய்ய நடுவர்கள் இரு வீரர்களையும் சமாதானப்படுத்தினர்.