புதிதாக சொகுசு கார் வாங்கிய விஜய்! விலை எவ்வளவு தெரியுமா?

Vijay New Luxurious Car Collection: நடிகர் விஜய், புதிதாக ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார். அதன் விலை என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய், கார்களை மிகவும் விரும்பும் நபர். இவர், தனது வீட்டில் சில விலை உயர்ந்த கார் கலக்‌ஷன்களை வைத்துள்ளார். இதில், புதிதாக இன்னொரு காரையும் இணைத்துள்ளார். அது மிகவும் விலை உயர்ந்த கார் என கூறப்படுகிறது. 

1 /7

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

2 /7

விஜய், ஏற்கனவே பல விலை உயர்ந்த கார்களை வாங்கி வைத்துள்ளார். அதில், ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட கார்களும் அடங்கும், 

3 /7

விஜய் வைத்துள்ள ஒரு காரின் விலை, 4.62 கோடி, இன்னொரு காரின் விலை 5.28 கோடி என கூறப்படுகிறது. 

4 /7

விஜய், புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் BMWi7 xdrive 60 என்ற புதிய காரை வாங்கியுள்ளார். இந்த சொகுசு காரில் எலக்ட்ரிக் வகை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாம். 

5 /7

விஜய்யின் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் BMWi7 xdrive 60 காரின் விலை, ரூ.2.30 கோடி ரூபாயில் இருந்து 2.50 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

6 /7

விஜய்யின் இந்த சொகுசு கார் குறித்த விவரம் தற்போது வைரலாகி வருகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

7 /7

விஜய், தற்போது தனது 68வது படத்தில் பிசியாக உள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைப்பெற்று வருகிறது.