Werewolf Syndrome: அரிய நோயினால் ஒநாய் போல் தோன்றும் முகம் ! 17 வயது சிறுவனின் அவல நிலை!

வைரல் செய்தி: லலித் படிதாருக்கு 17 வயது. அவர் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், இதன் காரணமாக அவரது முகத்தில் 5 செ.மீ நீளத்திற்கு முடி வளர்ந்துள்ளது. இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள ரத்லம் பகுதியில் வசிப்பவர். லலித் Werewolf Syndrome என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயில் முகத்தில் முடி வளரும். அதனால்தான் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முகம் ஓநாய் போல தோற்றமளிக்கத் தொடங்குகிறது.

1 /5

லலித் மத்திய பிரதேசத்தில் உள்ள நந்த்லேடா கிராமத்தில் வசிப்பவர். பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றிடம் பேசிய லலித், தனது தந்தை ஒரு விவசாயி என்றும் அவர் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் என்றும் கூறினார். லலிலத் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்.

2 /5

லலித், தான் இளமையாக இருந்தபோது, ​​குழந்தைகள் அவரைக் கண்டு பயந்ததாகவும் கூறினார். அந்த நேரத்தில், மக்கள் தன்னைப் பற்றி ஏன் பயப்படுகிறார்கள் என்பதை லலித்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் வளர்ந்த பிறகு, அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்பதை உணர்ந்தார்.

3 /5

ஹைபர்டிரிகோசிஸில், உடலில் அசாதாரண அளவு முடி வளரத் தொடங்குகிறது. ஹைபர்டிரிகோசிஸில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது பொதுவான ஹைபர்டிரிகோசிஸ் ஆகும், இதில் முடி உடல் முழுவதும் உள்ளது. இரண்டாவதாக, லோக்கல் ஹைபர்டிரிகோசிஸ் உள்ளது, இதில் முடி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வளரும்.

4 /5

லலித் தனது வாழ்நாள் முழுவதும் தனது உடலில் இந்த முடிகள் இருப்பதாக கூறினார். ஆனால், 6 முதல் 7 வயது வரை, அவர் விசித்திரமான எதையும் காணவில்லை. அதன்பிறகு முதல்முறையாக அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்பதை உணர்ந்தார்.

5 /5

குழந்தைகள், லலித்தை பேய், குரங்கு போன்ற பெயர்களில் கிண்டல் செய்து பயமுறுத்துவார்கள். லலித் கூறுகையில், தான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நான் ஒரு மில்லியனில் ஒருவன். எனவே நான் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்றார்.