விருச்சிக ராசி ஏன் ஸ்பெஷல்.. இளகிய மனம், அதீத ஞானம் கொண்டவர்கள்

Written ByVijaya Lakshmi
Published: Jul 09, 2024, 09:05 AM IST|Updated: Jul 09, 2024, 09:05 AM IST

Scorpio Characteristics: ஜோதிடத்தில் ராசி  மற்றும் நட்சத்திரம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் ஒருவரின் ராசி மற்றும் அவர்களின் நட்சத்திரத்திரத்தை வைத்து நாம் அந்த நபரின் குணாதிசயங்களை ஓரளவுக்கு கணிக்க முடியும். அதிலும் 12 ராசியில் குறிப்பாக விருச்சிக ராசிக்காரர்கள் சாதாரண வகையான மக்கள் இல்லை. இவர்கள் மற்ற ராசிகளை விட மிகவும் ஸ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.

விருச்சிகம் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் கிரகம் ஆகும். செவ்வாய் அதிபதி முருகன். இந்த ராசி கொண்டவர்கள் எப்போது ஸ்பெஷல் தான். அதேபோல் 12 ராசிகளில் இது 8வது ராசி ஆகும். பொதுவாக 8 ஆம் எண்ணில் இருக்கும் இந்த ராசி அடம் பிடிக்கும் குணம் கொண்டவர்கள். விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றன. எனவே இப்போது விருச்சிக ராசியின் குணாதிசயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

viruchiga Rasi Personality1/8

விருச்சிக ராசிக்காரர்கள் இளகிய மனம் கொண்டவர்கள்

இளகிய மனம் கொண்டவர்கள் தான் விருச்சிக ராசியின் முக்கிய குணாதிசயம். எப்போதும் அமைதியாக இருப்பார்கள். அதனால் தான் விருச்சிக ராசிக்காரர்கள் சாதாரண வகையான மக்கள் இல்லை என்பார்கள். இந்த மக்களை கவர்ச்சியான நபர்கள் என்று கூறுவார்கள். 

 

viruchiga Rasi Characteristics2/8

நீர் போல் குணம் கொண்டவர்கள்

விருச்சிக ராசி நீர் ராசிகள் என்பார்கள். ஏனெனில் இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்வார்கள். இவர்கள் அலைபோல் சலசலப்பாக இருபார்கள், மேலும் சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள் ஆவார்கள்.

 

viruchigam Rasi3/8

நண்பர்களுக்கு விசுவாசம் கொண்டவர்கள் விருச்சிக ராசி

கோபம், அன்பு, வேலை அனைத்திலும் தீவிரமாக அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் நண்பர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். இலக்குகளை அடைய கடினமாக உழைப்பவர்கள். எதையும் சாதிக்கும் குணம் கொண்டவர்கள்.

 

scorpio Characteristics4/8

விருச்சிக ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள்

விருச்சிக ராசிக்காரர்களின் சிறப்பு என்னவென்றால் இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். கலை, இசை அல்லது எழுத்து போன்ற படைப்பு முயற்சிகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

 

viruchiga rasi characteristics in tamil5/8

நகைச்சுவை குணம் கொண்டவர்கள்

குடும்பத்தில் விருச்சிக ராசியினர் இருந்தால், அங்கு எப்போதுமே நகைச்சுவை நிறந்திருக்கும். ஏனெனில் இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களின் நகைச்சுவை புத்திசாலித்தனமாக இருக்கும், இதனாம் அனைவரும் விரும்பும் காமெடியாக அமையும்.

 

viruchigam rasi kunam6/8

ரகசியங்களை பாதுகாப்பார்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் உங்களின் நபராக இருந்தால் ரகசியங்களை மனம் விட்டு கூறலாம். விருச்சிக ராசிக்காரர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் கடினம், இவர்கள் ரகசியங்களை தங்களது மரணம் வரை பாதுகாப்பார்கள்.

 

scorpio zodiac sign characteristics7/8

​உண்மையாக நேசிக்கும் குணம் கொண்டவர்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாது. ஆனால் அதீத நேசிக்கும் குணம் கொண்டவர்கள். காதல் முறிந்துவிடுமோ என்று கொஞ்சம் பயப்படுவார்கள். விருச்சிக ராசிக்காரர்களின் காதல் என்பது ஸ்பெஷல் தான், ஏனெனில் அவர்களின் அன்பு உண்மையானது.

 

Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.