Astro: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் முத்து... எந்த ராசிகள் அணியலாம்!

நம்மில் பலருக்கு முத்து அணிவது மிகவும் பிடிக்கும். எந்த விதமான ஆடைகளுடனும், நன்றாக பொருந்தக்கூடியது முத்து நகைகள். சில ராசிகளுக்கு முத்துக்களை அணிவது அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

முத்து குளிர்ச்சியான தன்மை கொண்டது. மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை அகற்றுகிறது. வெண்ணிற முத்தை அணிவது, பல வகைகளில் நன்மை தரக்கூடியது என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

1 /7

குளிர்ச்சியான தன்மை கொடுக்கக்கூடிய முத்து, சந்திரனுடன் தொடர்புடையது. எனவே, ஒரு நிலையற்ற மனநிலையை கொண்டுள்ள நபர்கள் முத்து அணிவதால், எதிர்மறை சிந்தனைகள் நீங்கி மனம் ஒரு நிலை படும் என்பது நம்பிக்கை. தன்னம்பிக்கை மற்றும் செயல் திறனையும் இது அதிகரிக்கும்.

2 /7

முத்தை வெள்ளியில் பொருத்தி அணிவது சிறப்பு என்று கூறப்படுகிறது. முத்து உடலில் படுமாறு, மோதிரம் செய்து, அதை அணிவதால் மனம் ஒருநிலைப்படும். அதிர்ஷ்டம் வந்து சேரும். அதிலும் சில ராசிகள் இதனால் பெரும் பலன் பெறுவார்கள்.

3 /7

மேஷ ராசியினர் முத்து மோதிரம் அணிவதால் சந்திரனின் நிலை வலுப்பெற்று மன உறுதியையும் நம்பிக்கையும் பெறுவார்கள்.

4 /7

கடக ராசிக்கு அதிபதி சந்திரன் எனவே. கடக ராசியினருக்கு முத்து மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

5 /7

விருச்சிக ராசியினர் முத்து மோதிரம் அணிவது, தன்னம்பிக்கையும் மன உறுதியையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. முத்து நகை நமது உடலில் படும் படி இருக்க வேண்டும்.

6 /7

மீன ராசியினர் முத்து மோதிரம் அணிவதால், மங்களகரமான பலன்கள் உண்டாகும். அலைபாயும் மனம் ஒரு கட்டுக்குள் இருக்கும். 

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.