பணவரவால் பரவசமடையப்போகும் ராசிகள்! இது செப்டம்பர் முதல் வார ராசிபலன்!

Weekly Horoscope Predictions : செப்டம்பர் முதல் வாரத்திற்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....  

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை செப்டம்பர் 2 முதல், செப்டம்பர் 8ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்கள்...

1 /13

செப்டம்பர் முதல் வாரத்திற்கான ஜோதிட கணிப்புகள். பொதுவான பலன்கள் இவை... அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றவாறு பலன்கள் மாறுபடும்

2 /13

பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களின் மூலம் அழகான அனுபவம் கிடைக்கும். வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகளை தள்ளிப்போடுவது நல்லது. புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்

3 /13

ரிஷப ராசியினருக்கு ஆதரவான சூழ்நிலை உருவாகும். திறமைகள் அங்கீகரிக்கப்படும், பாராட்டுகள் கிடைப்பதால் மனதில் பெருமையை ஏற்றிக்கொள்ள வேண்டாம், பேச்சுக்களில் பொறுமையும் பணிவும் வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் செலுத்தவும். நெருக்கடிகள் குறையும். சுப காரியங்கள் நடைபெறும்

4 /13

பல்வேறு சிந்தனைகள் மூலம் மனதில் அமைதியின்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் கவலையை அதிகரிக்கும், குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத செலவுகள், தடைகள் மூலம் எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.

5 /13

வாழ்க்கை தொடர்பான புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். புதிய வாகனம் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல காலம் இது

6 /13

பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதால் சிம்ம ராசியினரின் மனதில் இருந்த பாரம் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவி செய்ய வேண்டியிருக்கும்

7 /13

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் விழிப்புணர்வு அவசியம். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும் என்றாலும் கல்வி பயிலும் மாணவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். அதிகரிக்கும் செலவுகளால் சேமிப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்  

8 /13

வேலையில் அலைச்சல் உண்டாகும். முதலீடுகளில் இருந்து கிடைத்து வந்த வருமானம் குறையும். குடும்பத்தில் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரிகள், தங்கள் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் தீட்டும் நேரம் இது

9 /13

ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருந்தாலும், குடும்பத்தில் அதிருப்தியான சூழல் நிலவும் பணியிடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும் என்பதால், இழுபறியான பணிகளையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். முக்கியமான பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்கவும்

10 /13

எதிர்காலம் தொடர்பானஎண்ணங்கள் தோன்றும், ஆனால் அதை கவலையாக மாற்றிவிட வேண்டாம். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தினரிடம் ஆதரவு பெருகும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களுடன் ஒத்துப் போகும் வாரம் இது

11 /13

பணி இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் இது. இருந்தாலும் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோர்களின் உத்வேகம் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செலவை அதிகரிக்கும்

12 /13

மனதில் உள்ள ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் அதிர்ஷ்டமான காலம் இது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும், புதிய பொருட்களை வாங்கி மகிழும் காலம் இது. எதிர்கால முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கும் காலம் இது

13 /13

முதலீடு சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். அனுகூலம் நிறைந்த வாரம் இது. ஆவணி மாதத்தில் சுப காரியங்கள் தொடர்பான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும்