மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டர் வீணாவது தடுக்க டிப்ஸ்! ஒரு மாதம் கேஸ் 2 மாதம் வரும்

மழைக்காலத்தில் சிலிண்டர் கேஸ் உபயோகம் அதிகரிக்கும் நிலையில், அதனை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டர் உபயோகத்தை குறைக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால், எரிவாயு மிச்சமாகும். 

1 /8

பொதுவாகவே சிலிண்டரில் இருந்து கேஸ் வீணாவதை  தடுக்க, எரிவாயு கசிவு இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்த பிறகு கேஸ் பர்னரில் இருந்து ஏதேனும் லீக் இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும். 

2 /8

சிலிண்டரில் இருக்கும் சீல் சரியாக இருக்கிறதா இல்லை அதில் இருக்கும் பின் (PIN) லூசாக இருந்தால் கூட கேஸ் லீக்காக வாய்ப்பு இருக்கிறது. அதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

3 /8

இதுதவிர மழைக்காலத்தில் எந்த உணவுப் பொருட்களை சமைத்தாலும் நன்கு ஊற வைத்து சமைக்க வேண்டும். ஏனென்றால் குளிர் காரணமாக பாத்திரங்கள் வெப்பமடைய கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் அரிசி, பருப்பு என எல்லாவற்றையும் ஊற வைத்து சமைக்கவும்.  

4 /8

குளிர் சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த எந்த பொருளையும் உடனே சமைக்க வேண்டாம். இது அதிகப்படியான கேஸ் நுகர்வுக்கு வழிவகுக்கும். எந்த பொருளை பிரிட்ஜில் இருந்து எடுத்தாலும் சிறிது நேரம் வெளியே வைத்திருந்துவிட்டு சமைக்கவும்.  

5 /8

கேஸ் அடுப்பில் ஸ்லோவில் வைத்து எல்லாவற்றையும் சமைக்க முயற்சி செய்கிறார்கள். இப்படி மழைக்காலத்தில் சமைக்ககூடாது. ஏனென்றால் குறைந்த வெப்ப நிலை காரணமாக உணவுப் பொருட்களை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். 

6 /8

அதேபோல் மழைக்காலத்தில் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஸ்விட்ச் பாக்ஸ் அருகே சிலிண்டர்களை வைக்கக்கூடாது. 

7 /8

உங்கள் கேஸ் சிலிண்டர் டியூப் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அவற்றை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். 

8 /8

கேஸ் அடுப்பில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அவற்றை முழுமையாக சரி செய்துவிட்டு சமைக்கவும். இல்லையென்றால் அதனால் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. சிலிண்டர் எப்போது பயன்படுத்தும்போதும் இத்தகைய பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.