சரித்திரத்தின் பொன்னேடுகள் பற்பல நிகழ்வுகளை பதிவு செய்து பொக்கிஷமாய் பாதுகாக்கிறது. அந்த பேழையில் இன்றைய முக்கிய நிகழ்வுகள் புகைப்படத் தொகுப்பாக...
புதுடெல்லி: இந்த நாள் என்றும் திரும்பி வராது என்றாலும், கடந்த ஆண்டின் இதே நாள் என்று நினைவுகளை அசை போடும் பழக்கத்தை நாம் வழக்கமாகவே கடைப்பிடிக்கிறோம். சாதாரணமான மக்களே நினைவுகளை அசைபோட, பிறந்த நாள், திருமண நாள், காதலர் நாள், முத்த நாள் என அசை போடும்போது, உலக சரித்திரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை நாம் சற்று பின்னோக்கி திரும்பிப் பார்ப்போம். இது வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவான சில முக்கிய நிகழ்வுகளின் நினைவூட்டல்...
டிசம்பர் 21 இந்நாள், சரித்திரத்தின் பொன்னாள்....
Also Read | பெண்கள் வேட்டையிலும் சிறந்தவர்களா? 9000 ஆண்டு புதைகுழி சொல்லும் சரித்திரம்!!
1832 Battle of Konya: கொன்யா போரில் எகிப்திய படைகள் ஒட்டோமான் படைகளை தோற்கடித்தது இன்றே... டிசம்பர் 21 இந்நாள், சரித்திரத்தின் பொன்னாள்....
1898: பிரெஞ்சு விஞ்ஞானிகள் மேரி கியூரி மற்றும் பியரி கியூரி ஆகியோர் ரேடியத்தைக் கண்டுபிடித்த நாள் இந்நாள்...
1937: Snow White and the Seven Dwarfs, LA இல் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படத் திரையிடப்பட்ட நாள் இன்று
2012: கங்கனம் ஸ்டைல் (Gangnam Style) ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் யூடியூப் வீடியோ
1968: அப்பல்லோ 8, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சந்திரனின் சுற்றுப்பாதையில் முதல் மனித பயணம் மேற்கொள்ளப்பட்டது