Diabetes Symptoms on Skin: நீரிழிவு நோயின் சில அறிகுறிகள் தோலில் தென்படுகின்றன. இந்த அறிகுறிகள் உயர் இரத்த சர்க்கரை காரணமாக உருவான நீரிழிவு நோயைக் குறிக்கின்றன.
Diabetes Symptoms on Skin: இவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்தால், சர்க்கரை நோயை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தலாம். இதில் கவனமாக இருப்பதன் மூலம் சிலர் வாழ்நாள் முழுவதும் உடலில் தங்கியிருக்கும் இந்நோயை தவிர்க்கலாம். தோலில் தோன்றும் சர்க்கரை நோயின் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் மென்மையான தோலில் திடீரென கருமையான, தடித்த திட்டுகள் தோன்ற ஆரம்பித்தால், தவறுதலாக கூட அவற்றை புறக்கணிக்காதீர்கள். இவை உடலின் மூட்டுகளிலும் தசைகளிலும் தெரியும். குறிப்பாக அக்குள், கழுத்து, முழங்கால்களை வளைக்கும்போது, இடுப்பு மற்றும் மார்பகங்களின் கீழ் இவை தெரியும். இவை அனைத்தும் நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.
உங்கள் தோலில் சிறிய மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பருக்கள் அல்லது காயங்கள் தோன்றினால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். இவை உயர் நீரிழிவு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறிக்கின்றன. இவை அரிப்பை உண்டாக்கும். இவை அதிகமாக தொந்தரவு செய்யலாம். இவை தோன்றினால் உடனே சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோல் தொடர்பான பிரச்சனைகளால் (Skin Problems) அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் காயங்கள் குணமாக அதிக காலம் எடுக்கும். உயர் இரத்த சர்க்கரை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
தோலின் கீழ் மஞ்சள் மற்றும் கொழுப்பு படிவு அதிகரிப்பு அதிக நீரிழிவு நோயைக் குறிக்கிறது. நீரிழிவு நோய் அல்லது டிஸ்லிபிடெமியா (இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களின் அசாதாரண நிலைகள்) கட்டுப்பாட்டில் இல்லாத நபர்களுக்கு இது பொதுவாகும்.
தோலில் உள்ள ஓவல், செதில் திட்டுகள் நீரிழிவு நிலைகளைக் குறிக்கின்றன. இது மிகவும் பொதுவான தோல் பிரச்சனைகளில் ஒன்றாகும். இவை குறிப்பாக ஆடுசதையில் தெரியும்.
கால்விரல்களைச் சுற்றியுள்ள இறுக்கமான மற்றும் அடர்த்தியான தோல் நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இது டிஜிட்டல் ஸ்க்லரோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது. இது டைப் ஒன் சர்க்கரை நோய் உள்ளவர்களிடம் அதிகம் தெரியும். இதனால், நடப்பதில் சிரமம் ஏற்படும்.
கைகள் அல்லது கால்களில் திடீரென கொப்புளங்கள் தோன்றுவது நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த கொப்புளங்கள் திடீரென்று தோன்றும். இவற்றில் வலி இருக்கும். இந்த கொப்புளங்கள் குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் தெரியும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.