வாட்ஸ்அப் புரொபைல் புகைப்படங்களை பாதுகாக்கும் வகையில் புது அப்டேட் ஒன்றை கொண்டு வர உள்ளது.
குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்-அப் செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது புதிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது. அதன்படி, வாட்ஸ் அப்பில் பயனர்களின் ப்ரோபைல் புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை மெட்டா கொண்டு வர உள்ளது.
ஏற்கனவே, விருப்பப்பட்ட வாட்ஸ் அப் பயனர்களுக்கு மட்டும் தங்களது ப்ரொபைல் புகைப்படத்தை காண்பிக்குப்படி வசதி இருக்கிறது. மற்றவர்களுக்கு ப்ரொபைல் புகைப்படம் காண்பிக்கப்பட்டாது.
இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் பயனர்களின் ப்ரொபைல் புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுப்பதற்கான புதிய வசதியை மெட்டா கொண்டு வர உள்ளது. இந்த வசதி பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தங்கள் அனுமதியின்றி ப்ரோபைல் புகைப்படத்தை எடுப்பதை தடுக்க உதவுகிறது.
ஏற்கனவே, இந்த வசதி இன்ஸ்டாகிராம், கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட ஆப்களில் இருக்கும் நிலையில், தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பிலும் கொண்டு வர உள்ளது.
மேலும், இந்த வசதி முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்க பெற, விரைவில் ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.