Pushpa 2 OTT Release : அல்லு அர்ஜுன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான புஷ்பா 2 : தி ரூல் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை எப்போது முதல் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
Pushpa 2 OTT Release : இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் பெரிய ஹிட் அடித்த படமாக இருக்கிறது புஷ்பா 2. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். சுகுமார் இயக்கியிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம், 2021ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து, அந்த கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படம்தான் இந்திய அளவில் கடந்த சில ஆண்டுகளாக ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
புஷ்பா 2 திரைப்படம் இம்மாதம் 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
2021ஆம் ஆண்டு வெளியான போது புஷ்பா 1 படம் நல்ல ஹிட் அடித்ததை தொடர்ந்து, இப்படத்தின் மீதும் பெருமளவு எதிர்பார்ப்புகள் எழுந்தது. அதனை முழுமையாக்கும் வகையில் உள்ளது புஷ்பா 2 படம்.
முதல் பாகத்தில் ஹீரோவின் எழுச்சி கதையை பேசிய இப்படம், இரண்டாம் பாதியில் அவன் எப்படி தன் கையில் கிடைத்த அதிகாரத்தை வைத்து டான் ஆகிறான் என்பதை காட்டுகிறது.
புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா அல்லு அர்ஜுனின் ஜோடியும் ரசிகர்களின் மனங்களை அள்ளியிருக்கிறது. இதில் இடம் பெற்றிருக்கும் பீலிங்க்ஸ் பாடலும், கிஸ்ஸிக் பாடலும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
புஷ்பா 2 படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை இப்படம் 1,400 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
புஷ்பா 2 படம், இந்த வார இறுதிக்குள் 1,500 கோடி வசூலை தாண்டிவிடலாம் எனக்கூறப்படுகிறது.
புஷ்பா 2 படம், வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.