உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்

அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட  எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடக்கூடிய வாய்ப்பு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 9 அணிகளுக்கும் இருக்கும் வாய்ப்புகள்

1 /7

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்த இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணிக்கு 85 விழுக்காடு வாய்ப்புள்ளது. வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பை தீர்மானிக்கும். 

2 /7

நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, 76 விழுக்காடு வாய்ப்புள்ளது. அந்த அணிக்கு இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் ஆஸி அணி ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும். 

3 /7

இங்கிலாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கும் நியூசிலாந்து அணிக்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  விளையாட 78 விழுக்காடு  வாய்ப்புள்ளது. இந்த தொடர்களில் சிறப்பாக ஆடி கைப்பற்றினால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம். 

4 /7

அதேபோல், இங்கிலாந்து அணி நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றினால் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கும். 

5 /7

வங்கதேசம் அணியும் உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் உள்ளது. அந்த அணி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர்களைக் கைப்பற்றினால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம். 

6 /7

தென்னாப்பிரிக்கா அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றினாலும் இறுதிப்புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது தீர்மானமாகும்.   

7 /7

இலங்கை, பாகிஸ்தான் மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பில்லை.