Saturday Worship Of Hanuman : சனீஸ்வரருக்கு உரிய சனிக்கிழமைகளில் சனிதேவரைத் தவிர, ஈஸ்வரன் மற்றும் அனுமாரையும் வணங்கினால் சனி தோஷங்கள் அகலும்... அது எப்படி? தெரிந்துக் கொள்வோம்...
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது வைகுண்டப்பதவியைக் கொடுக்கும் என்பது ஐதீகம். ராமநாமம் சொல்லும் இடத்தில் அனுமார் இருப்பார் என்றால், அனுமனின் பெயரைச் சொல்லும் இடத்தில் ராமரும் இருப்பார்
பக்தனுக்கு பக்தனாக மாறும் இயல்புடைய அனுமார் ராமநாமத்தை உச்சரிப்பதிலேயே பரமசுகம் காணும் பக்தர். அஞ்சனையின் மைந்தனான ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை உகந்த நாள் என்பதற்கான காரணம் என்ன தெரியுமா?
அனுமான் வழிபாடு கிரக தோஷங்கள் அனைத்தையும் அகற்றும் என்பது ஐதீகம். அனைத்து கிரகங்களும் நீதிபதி என்று அழைக்கப்படும் சனீஸ்வரரை சாந்திப்படுத்துவது என்பது சுலபமானதல்ல, ஆனால், ஆஞ்சநேயரை திருப்திப்படுத்த ராமநாமம் ஒன்றே போதுமானது
பஞ்ச பூதங்களில் வாயுவின் மகனான ஆஞ்சநேயர் பக்தர்களின் குரலுக்கு வாயுவேகத்தில் வந்து துயர் தீர்ப்பார் என்பது நம்பிக்க்கை
ராமரை நெஞ்சில் வைத்திருக்கும் ஆஞ்சநேயரை நெஞ்சோடு நெஞ்சாக கட்டித் தழுவி அவரது பக்தியை ஸ்ரீராமர் ஏற்றுக் கொண்டார். ராமநாம மகிமையை அனுமாரைப் போல அறிந்தவர் வேறு யாருமே இருக்க முடியாது
சஞ்சீவனி மலையையே தூக்கிய அனுமார், தன்னை வேண்டுபர்களின் மலை போன்ற கவலைகளையும் மடுவாக குறைத்துவிடுவார் என்பது நம்பிக்கை
ஆஞ்சநேயரை வழிபடுபவர்கள் வடைமாலை மற்றும் வெண்ணெய் சாற்றி வணங்குவார்கள். அதிலும் சனிக்கிழமை வெண்ணைக்காப்பு மிகவும் விசேஷமானது.
பிரம்மாண்டமாய் வடிவம் எடுக்கக்கூடிய ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது விஷேசமானது. வெற்றிலை மாலை சாற்றி அனுமரை வழிபட்டால், துன்பங்கள் எல்லாம் வெற்று இலையாய் மாறிவிடும்