₹15,000 இருந்தால் போதும், ₹1 லட்சத்துக்கு மேல் வருமானம் தரும் சூப்பர் பிஸினஸ்..!!

சிறு வணிக திட்டம்: கொரோனா தொற்றுநோயின் போது, ​​கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர் மற்றும் பல வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், எப்போதும் லாபம் தரும் ஒரு வணிகத்தை மேற்கொண்டால், வருமானமும் பாதிக்காது. மேலும் இந்த வணிகத்தை தொடங்க அதிக பணம் முதலீடு செய்ய வேண்டியதில்லை.

சிறு வணிக திட்டம்: கொரோனா தொற்றுநோயின் போது, ​​கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர் மற்றும் பல வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ள. அத்தகைய சூழ்நிலையில், எப்போதும் லாபம் தரும் ஒரு வணிகத்தை மேற்கொண்டால், வருமானமும் பாதிக்காது. மேலும் இந்த வணிகத்தை தொடங்க அதிக பணம் முதலீடு செய்ய வேண்டியதில்லை.

1 /6

சானிடரி நாப்கின் பிஸினஸ் என்பது எப்போதும் தேவை இருக்கும் வணிகமாகும். இந்தத் தொழிலைச் செய்ய உங்களுக்கு அரசாங்க உதவியும் கிடைக்கும். மேலும் சானிடரி நாப்கின் தயாரிக்கும் யூனிட்டை  அமைக்க அதிக செலவு இல்லை. அதோடு, உங்கள் வீட்டில் உள்ள சிறிய அறையில் இதனை தொடக்கலாம். 

2 /6

சானிட்டரி நாப்கின்களின் தொழிலைத் தொடங்க, முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு குறைந்த வட்டியிலான கடன் வழங்குகிறது. இந்த வணிகத்தின் மூலம், முதல் ஆண்டில் 1 லட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம், அடுத்த ஆண்டு முதல் உங்கள் லாபம் அதிகரித்து கொண்டே போகும்.

3 /6

ஒரு நாளைக்கு 180 பாக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் யூனிட்டைஅமைப்பதற்கு 1.45 லட்சம் செலவிடப்படும். இதில் 90 சதவீதம் அதாவது 1.30 லட்சம் ரூபாயை முத்ரா திட்டத்திலிருந்து எடுக்கலாம். மீதமுள்ள 15 ஆயிரத்தை கையில் இருந்து போட்டால் போதும்.

4 /6

சானிடரி நாப்கின் தயாரிக்கும் பிஸினஸ் தொடர்பாக அரசாங்கம் தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த பிஸினஸ் செய்ய, சாப்ட் டச் சீலிங் மெஷின், நாப்கின் கோர் டை, யுவி ட்ரீட் யூனிட், டீபைபரேஷன் யூனிட், கோர் மார்னிங் மெஷின் ஆகியவை  நிறுவப்பட வேண்டும். இதற்கு ரூ .70,000 செலவாகும். இயந்திரத்தை வாங்கிய பிறகு, இதற்கு தேவையான கச்சா பொருட்களான், மர கூழ், மேல் அடுக்கு, பின் அடுக்கு, ரிலீஸ் காகிதம், பசை, பேக்கிங் கவர் போன்ற மூலப்பொருட்கள் வேண்டும். இதற்கான மூலப்பொருள் வாங்க ரூ .36,000 செலவாகும்.

5 /6

உங்கள் யூனிட்டில் ஒரு வருடத்தில் 300 நாட்களுக்கு செயல்படும் போது, சுமார் 54,000 (180x300 = 54,000)  நாப்கின் பேக்கெட்டுகள் தயாரிக்கப்படலாம். இந்த அளவிலான பாக்கெட்டுகளின் உற்பத்திக்கு ஆண்டுக்கு சுமார் 5.9 லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின்களின் மொத்த விலை ரூ .13 ஆக இருந்தால், மொத்த விற்பனை மதிப்பு ரூ .7 லட்சமாக இருக்கும். அதாவது, லாபம் ரூ .1 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

6 /6

இந்த தொழிலைத் தொடங்க, நீங்கள் எந்த பெரிய தொழிற்சாலையையோ ஆலையையோ அமைக்க வேண்டியதில்லை, இந்த வணிகத்தை ஒரு சிறிய அறையில் தொடங்கலாம்.16x16 சதுர அடி கொண்ட ஒரு அறையில் நாப்கின் தயாரிக்கும் யூனிட் ஒன்றை நிறுவலாம்.