நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை பூனம் பாஜ்வா. இப்படத்தை தொடர்ந்து அவர் தெனாவெட்டு, கச்சரி ஆரம்பம், துரோகி என பல படங்களில் நாயகியாக நடித்த வருக்கு பின்னர் சரியான பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.
இதையடுத்து சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு கேரக்டர் நடிகையாக நடித்தார். ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 என பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா தமிழ்ப்படங்களில் மட்டுமின்றி மலையாளத்தில் கேரக்டர் நடிகையாகவும் நடித்து வந்தார்.
இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நாயகியாகவும், கெஸ்ட் ரோல்களிலும் நடித்துள்ள பூனம் பாஜ்வா தற்போது மாஸ்டர் பீஸ், மரியா உள்ளிட்ட சில படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படங்களைத் தொடர்ந்து லேனா அலெக்சாண்டர் என்ற படத்தில் நடிக்கயிருக்கும் அவருக்கு, தமிழ் சினிமாவை விட மலையாளத்தில் அடுத்தடுத்து படங்கள் கிடைகின்றது.
இவர் முன்பு மும்பையில் இருந்து வந்து சென்னையில் தங்கியபடி மலையாள படங்களில் நடித்து வந்தவர், இப்போது மும்பையில் இருந்து நேரடியாக கேரளாவுக்கே சென்று அங்கு தங்கியே நடித்து வருகிறார் என்று சமீபத்தில் கூறிவந்தனர்.
பூனம் பாஜ்வாவுக்கு ரோமியோ ஜூலியட்-க்கு அடுத்து சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகவில்லை.அதற்கு முக்கிய காரணம் அவரின் உடல் எடை என்றும் கூறலாம். அதிக உடல் எடை காரணமாக படங்களில் இவரை யாரும் கமிட் செய்வது இல்லை என வதந்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளது.
அதை தொடர்ந்து தற்போது தன் உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அவை ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகின்றது.
இதோ அந்த புகைப்படம்....!